[இக்களத்தில் புருடோத்தமனுடைய காம நிலைமையும் குடிலன் அகப்பட்டுக்கொண்ட கதையும் கூறப்படுகின்றன.] ஐந்தாம் அங்கம் இரண்டாங் களம். 1. எதுக்கும் - எந்தக் காரணத்தை முன்னிட்டும். 9. கின்னரம் - இசைக்கருவியிலொன்று. இதனையுடைவர் கின்னரர், கின்னரக்காரர் எனப்படுவர். 26. பாங்கு - பக்கம். 35. துணிபு - துணிச்சல். 41. கோட்டி - வளைத்து. 53. அவசரம் - அவசியம். 54. ஆஞ்ஞை - ஆணை. 43-61. [மனோன்மணிக்கும் பலதேவனுக்கும் மணவினை நடத்துவிக்க ஜீவகன் துணிந்து கொண்டு அச்செய்தியை மனோன்மணிக்கு அறிவிக்க அதற்கு அவள் கூறிய மறுமொழிகளை இங்ஙனம் 1 ம் தோழி 2 ம் தோழிக்குத் தெரிவிக்கின்றாள்.] 70. சுரத்து - காய்ச்சலில். 71. [அன்று - கனாக்கண்டு காமங்கொண்ட அன்று.] 75. ஆடி - கண்ணாடி, முகம் பார்க்க உதவுவது. 84. வழங்கவும் - சொல்லவும். 90. [இது வாணிக்கும் நடேசனுக்கும் மனோன்மணி வேண்டிக் கொண்ட மணவினை.] 101. [பொருந்தீர் - எழுவாய் - நீயும் பலதேவனும்.] 102. பெருந்துயர் - பல தேவனை மணக்கலாரும் துன்பம். 114. இச்சையாதி - ஆசை முதலியன. 117. மண்ணிய - கழுவிய. 119. சேக்கை - இடம். 122. தொழும்பு - அடிமை. 124. அரண் - காவலுள்ள இடம். 125. [செந்தீயைந்து - பஞ்சாக்கினி, அவை நான்கு திசைகளிலும் நான்கு தீக்குண்டமும், மேலே சூரியனும்.] 130. போனகம் துறந்து - உணவை விட்டு. 150. வெள்ளில - விளா. இங்கு முதலாகு பெயராய் விளங்கனியென்க. 'யானையுண்ட விளங்கனி' என்பது பழமொழி, இதில் வெளித்தோற்றம் முன்போலதாகக் காணப்படினும் உள்ளே உள்ளீடில்லாதிருக்கும். 151. வேதகம் செய்த - வேறுபடுத்திய, போதகம் - யானைக்குட்டி, யூதபம் - அரச யானை. 163. வாஞ்சாவசம் - அன்பின் வசம். 164. உணர்வு - அறிவு. 165. கடவுள் என்ற ஒன்று இல்லாமற் போமாயின். 166. வேண்டிய விளைக - வேண்டியபடி யெல்லாம் செயல்கள் உண்டாகுக. [இக் களத்தில் மனோன்மணியின் பரிபக்குவ நிலைமையும் உத்தம தவசின் இலக்கணமும் ஒருவாறு கூறப்பட்டன.] ஐந்தாம் அங்கம் மூன்றாம் களம் 3. அரிவை - பெண். 19 வயது முதல் 25 வயது வரையுள்ள பெண்கள் - இது பெண்கள் ஏழு பருவங்களில் ஒன்று. மற்றவை பேதை, பெ
|