தும்பை, மங்கை, மடந்தை, தெரிவை, பேரிளம்பெண் என்பன. இங்கு அரிவை பொதுவாய்ப் பெண்களைக் குறிப்பது. 12. மணிக்கே - மனோன்மணிக்கே. 22. காட்டல் - பாவனை செய்தல். 29. அவ்வுழி - அந்த இடம், உழி - ஏழனுருபு, இங்கு இடத்தைக் குறித்தது. 38. [பிழைத்தல் - உய்தல், குற்றப்படுதல்] 40. வெந்தது வீடு - குடி கெட்டது. 44. நமர்காள் - நம்மவர்களே! 45. கொலு - அரசு வீற்றிருக்குமிடம். 52. [பாடு - உழைப்பு, நாராயணன் பாடு என்பதற்குக் கேடு எனப் பொருட்படுத்தி விடை கூறுகிறான்.] 65. கோலாகலம் - ஆடம்பரம். 77. எள்ளரும் - இகழ்தலில்லாத. 80. மானும் - ஒக்கும், போலும். 83. படும் - பொருந்தும். 93. [பெரியள் - வயதிற் பெரியள், பக்குவவதி.] 100. கொற்றவை - அரச சபை. 102. இறும்பூது - வியப்பு. 104. வன்திறல் - வலிய திறமை, மிக்க வலிமை, திறல் - வெற்றியுமாம். 105. ஆரா - நீங்கா. 108. ஆள்வினை - முயற்சி. 112. தற்புகழ் - தன்னைப்புகழ்தல். 124. பலிதம் - பலனைத் தருவது. 131. அயிர்ப்புறார் - ஐயமடையார். 137. தாபதம் - தவப்பள்ளி. 142. கவ்விய - பற்றிய. 144. தீச்செறி - நெருப்பிற் பொருந்தும். 148. தெருள் - அறிவு. சூழ்ச்சி - ஆலோசனை. 154. புலையன் - நீசத்தன்மையன், 167. தினமணி - சூரியன். கொச்சகக்கலிப்பா. 1. கரி - கஜேந்திரன் என்னும் யானை, ஆர் துயர அளக்கர் - நிறைந்த துன்பக் கடல். 2. தெரிவை - துரோபதை. 3. மார்க்கண்டன் - மிரு கண்டு முனிவர் மகன். தத்திதாந்தநாமம். வெறி கழுமி - கலக்கம் பொருந்தி, பொறி யழியும் - ஐம்பொறி யுணர்வும் அழியப்பெற்ற. [கொச்சகக்கலிப்பா மூன்றும்பொதுவான பிராத்தனையாகவும், மனோன்மணியின் கனாக்காட்சிக்கும் காமநிலைக்கும் ஏற்றதாகவும் நிற்பது காண்க. ] 177. ஏற்புடை - தக்க. 180. வாங்குதி - வாங்குவாய் பெறுவாய். 184. கண் அளவில்லாது நீர் பெருகி உள்ளே வறட்சியடைந்தது என்பது இவ்வரிப்பொருள். 185. நாட்டம் - கண். 193. [மூன்றாம் அங்கம் நான்காம் களத்துள் நடந்த சம்பாஷணைப்படி கருணாவிலாசம் கண்டேன் என்பது பொருள்.] 202. வஞ்சியான் வஞ்சியான் - வஞ்சி மன்னனாகிய சேரன் வஞ்சிக்க மாட்டான். 211. பண்ணியல் - பண் பொருந்திய. 213. அருமருந்தை - அரியதேவாமிர்தம் போல்வாளாகிய மனோன்மணியை. 229-230. நாளைக்குப் போர் செய்ய விரும்புவாயானால் போரின் வலிமையைப் பார்ப்போம். 225. [தாரா - தாராக, மணமாலையாகத் தன் கை யிரண்டும் சூட்டி.] 229. கண் வளர்தல் - நித்திரை செய்தல். 233. [திடுக்கிட்டு விழித்ததைப் பிரிவிற்கஞ்சி நடுங்கினதாகக் கருதி
|