பக்கம் எண் :

14

மகாவைத்தியாநாதையர் அவர்கள் குறித்திருந்த இராக அட்டவணையையும் கொடுத்த, வையைச் சேரி, மகா---ஸ்ரீ அப்பாசாமி ஐயர் அவர்களுக்கு, நன்றியறிந்த வந்தனம் கொல்லுகிறேன்.

தஞ்சை சங்கீத வித்யா மகாஜன சங்க விஷயமாகவும், இப்புத்தக விஷயமாகவும், அப்போதைக்கப்போது ஏற்படும் கடிதப் போக்கு வரவுகளில் உதவியாக வேலை செய்துவரும் தஞ்சை, சங்கீதவித்யா மகாஜன சங்கம், Honorary Secretary, மகா---ஸ்ரீ N. P. சுப்பிரமணிய ஐயர் அவர்களுக்கு, மிகுந்த நன்றியறிதலுள்ளவனா யிருக்கிறேன.

சங்கீதத்தில் வழங்கிவரும் சுரம், சுருதிகள் இன்னவையென்று ஒன்றோடொன்று ஒத்து வராத பலகணக்குகளைச் சொல்லியதனால், நான் அவைகளை ஆராயவும், அவர்கள் யாவற்றிற்கும் மேலானதும், தற்கால அனுபோகத்திற்கு ஒத்திருப்பதுமான, பூர்வ தமிழ்மக்களின் கானத்தில் வழங்கிவரும் நுட்பமான சுருதிகளையும், மேலான முறைகளையும் கண்டு பிடிக்கவும், அனு கூலமாயிருந்தவர்களுக்கும், ‘தமிழர்களுக்குச் சங்கீதம் ஏது? கண், காது, மூக்கு, வாய் என்னும் வார்த்தைகள் கூட சமஸ்கிருதத்திலிருந்து திரிந்து தமிழில் வழங்குகின்றன’ என்று சொல்லிய கனவான்களுக்கும், நான் மிகவும் மனப் பூர்வமாக வந்தனம் சொல்லுகிறேன்.

தஞ்சை சங்கீத வித்யா மகாஜன சங்கத்திற்கு வந்திருந்து அக்கிராசனம் வகித்து, சபையோரையும் என்னையும் உற்சாகப் படுத்திய, மைசூர் வைணீக வித்வான், மகா---ஸ்ரீ H.P. கிருஷ்ணராவ் B.A. அவர்களுக்கும், Retired Sub-Judge Palghat, மகா---ஸ்ரீ இராமகிருஷ்ணையர் B.A., B.L., அவர்களுக்கும், கும்பகோணம் Sub-Judge மகா---ஸ்ரீ பால சுப்பிரமணிய ஐயர் B.A., B.L., அவர்களுக்கும், பரோடா திவான் சாகிப் மகா---ஸ்ரீ V.P. மாதவராவ் C.I.E., அவர்களுக்கும், மைசூர் வைணீக சிகாமணி மகா---ஸ்ரீ சேஷண்ணா அவர்களுக்கும் நன்றியறிந்த வந்தனம் சொல்லுகிறேன்.

ஒரு ஸ்தாயியில் வரும் நுட்பமான சுருதிகள் இன்னவையென்று அறிந்துகொள்ள இயலாமல், ச-ப, முறையாய் ஒரு ஸ்தாயியில் பன்னிரண்டு சுரங்கள் வருவது ஏமாற்றத்தை உண்டாக்கக்கூடியவையென்றும், ச-ப முறையில் ஒரு ஸ்தாயியில் 53 சுருதிகள் கிடைக்கின்றனவென்றும், அவைகளில் 22 சுருதிகளைப் பூர்வத்தோர் வழங்கி வந்திருக்கிறார்களென்றும், தமிழர்களுக்கு சங்கீதம் ஏது என்றும் சொல்லி, என் அபிப்பிராயத்திற்கு முற்றிலும் விரோதமாயிருந்தாலும், கர்நாடக சங்கீதத்தில் மிகப் பாண்டித்தியமுள்ளவரென்று நாளது வரையும், யாவராலும் கொண்டாடப்பட்டு வரும் சிறந்த வித்வான் மகா---ஸ்ரீ மகாவைத்தியநாதையர் அவர்களிடத்திலும், கருந்தட்டான்குடி மகா---ஸ்ரீ தியாகராஜபிள்ளை அவர்களிடத்திலும், கதை செய்வதில் தேர்ந்த மகா---ஸ்ரீ கிருஷ்ண பாகவதரிடத்திலும் கேட்டுக்கொண்ட முறைப்படியே, யாவரும் கொண்டாடும்படி பழமையான பல இனிய கீர்த்தனங்களைச் சுர சுத்தமாய்த் தாளத்துடன் மிகப் பிரயாசையோடு என் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்த மகா---ஸ்ரீ பஞ்சாபகேச பாகவதர் அவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனா யிருக்கிறேன். பல கீர்த்தனங்களில் வரும் நுட்பமான சுருதிகளின் ஓசைகளைச், சந்தேகமற அறிந்து கொள்ளக்கூடிய விதமாய், அவர்கள் சொல்லிவைத்ததினாலேயே நான் ஆராய்ச்சி செய்து சொல்வதற்கு உதவியாயிருந்ததென்று மனப் பூர்வமாய் ஒப்புக்கொள்ளுகிறேன்.

அதோடு மகா மகோபாத்தியாயர் மகா---ஸ்ரீ வே. சாமிநாதையர் அவர்கள், அழிந்துபோகாமல் அச்சிட்டுத் தந்த, நுட்பமான சுருதிகள் வழங்கும் நாலு பாலைகளைச் சொல்