லும், பூர்வ தமிழ் முறைகளடங்கிய சிலப்பதிகாரத்தின் பேருதவியினாலேயே, இதை நான் எழுதக் கூடியவனானேன் என்று மனப்பூர்வமாய் ஒப்புக்கொள்ளுகிறேன். சங்கீத விஷயமாய் எனக்குத் தோன்றிய புதிய முறைகளை நான் சொல்ல, அவைகளை மனஞ்சலியாமல் மிகப் பொறுமையோடு கற்றுக்கொண்டு, இராக முறையும் கீதமும் கீர்த்தனங்களும் செய்வதிலும், கர்நாடக சங்கீதத்தில் வழங்கிவரும் நுட்பமான சுருதிகள் இன்னவையென்று கண்டுபிடிப்பதிலும், கான்பரென்ஸ்களில் பலர் முன்னிலையில் அவற்றைப் பாடிக்காட்டுவதிலும் இராகங்களைப் பிழைபார்ப்பதிலும், என் குமாரத்திகள் மரகதவல்லி அம்மாள் (Mrs. Durai Pandian), கனகவல்லி அம்மாள் (Mrs. Navamoney), எடுத்துக்கொண்ட பிரயாசையும் என் மனையாள் பாக்கியம் அம்மாளின் ஊக்கமும் மிகவும் பாராட்டத்தகுந்ததே. தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதி விஷயமாக நான் நெடுநாள் செய்து வரும் வேலையை நன்கு மதித்ததற்காகவும், பரோடாவில் ஹிஸ் ஹைனஸ் மகாராஜா அவர்கள் நடத்திய கான்பரென்ஸுக்கு என்னை வரவழைத்ததற்காகவும், தென்னிந்திய சங்கீதத்தின் சுருதிகளைப்பற்றி உபந்நியாசம் செய்து, வீணையின் மூலமாகவும் வாய்ப்பாட்டின் மூலமாகவும் திஷ்டாந்தப்படுத்திக்காட்ட எவ்வித ஆக்ஷேபனையுமின்றி ஆல்-இந்திய மீயூசிக் கான்பரென்ஸ் சபையார் யாவரும் ஒப்புக்கொண்டபொழுது, தானும் அதில் மிகுந்த சந்தோஷமடைந்து, ஹிஸ் ஹைனஸ் மகாராஜா முன்னிலையிலும் பாடிக்காட்டும்படிச் செய்ததற்காகவும், தஞ்சையில் சுருதி நிச்சயம் செய்யவேண்டுமென்று கூட்டப்பெற்ற ஏழாவது கான்பரென்ஸுக்குப் பிரசிடெண்டாக இருக்க ஒப்புக்கொண்டு நடத்தியதற்காகவும், பரோடா திவான் சாகிப் மகா- - -ஸ்ரீ V. P. மாதவராவ் C. I .E. அவர்களுக்கு நான் மனப்பூர்வமாக நன்றிபாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன். சுருதி விஷயமாய் நான் விசாரிக்கையில், பலர் என் கருத்திற்கு விரோதமாய் வாதாடினாலும், சிலர் அலட்சியம் செய்தாலும், என் முறையை அறிந்த சிநேகிதர் சிலர் சமயத்தில் விலகிப் போனாலும், முன் பின் அறியாமல் தூஷித்தாலும், அவைகளை நான் பெரிதாக நினைக்கவில்லை. அறியாமையினால் இப்படிச் செய்தார்கள் என்று நான் அவர்களை மன்னித்தேன். தாங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் நுட்பமான சுருதிகளைப்பற்றி, நிச்சயமான ஞானமுண்டாகும் பொழுது, பூர்வம் தமிழ்மக்கள் வழங்கிவந்த 7, 12, 24, 48, 96 போன்ற நாதவேற்றுமைகள் தான் நிச்சயமானவையென்று காண்பார்கள். இந்நாத வேற்றுமைகள் அனுபோகத்திற்கு வந்திருந்தும், எப்படி அறிந்துகொள்ளுகிறதென்ற விபரம் தெரியாமல் பலர் பலவிதமாய் நினைக்கவும், சொல்லவும் ஏற்பட்டார்கள். பூர்வம், தமிழ் மக்களின் நாலு பாலைகளில் நம் இராகங்கள் நுட்பமான சுருதிகளுடன் வருகின்றனவென்று தம் அனுபவத்தாற் காணும் பொழுது, சூரியனைக்கண்ட இருளும் பனியும் நீங்குவதுபோல, அவர்கள் அறியாமை உடனே நீங்கிவிடுமென்று, நான் நிச்சயமாக நம்புகிறேன். என் நம்பிக்கை ஆதாரமற்றதல்ல. பூர்வ தமிழ் முறைப்படி, நான் இங்கே சொல்லியிருக்கும் சுருதி முறையும், அதன்படி பாடிக்காட்டிய அனுபோக முறையும், வீணை வாசிப்பதில் மிகத் தேர்ந்தவரென்று யாவராலும் கொண்டாடப்படும், மைசூர்சமஸ்தான வித்வான், வைணீக சிகாமணி மகா- - -ஸ்ரீ சேஷண்ணா அவர்களாலும், மைசூர் வைணீக வித்வான் மகா- - -ஸ்ரீ H. P. கிருஷ்ணராவ் B. A. அவர்களாலும், விஜயநகரம் சமஸ்தான வைணீக சிரோமணி மகா- - -ஸ்ரீ வேங்கடரமணதாஸ் அவர்களாலும், பரோடா திவான் சாகிப், மகா- - -ஸ்ரீ V. P. மாதவராவ் C. I. E. அவர்களாலும், பூண்டி மகா- - -ஸ்ரீ ராவ் பகதூர் V. A. வாண்டையார் அவர்களாலும்,மகா- - -ஸ்ரீ
|