பக்கம் எண் :

16

A. G. பிச்சைமுத்து B.A., L.T., அவர்களாலும், வையைச்சேரி, மகா---ஸ்ரீ அப்பாசாமி ஐயர் அவர்களாலும், திருநெல்வேலி, Hindu College Science Assistant மகா---ஸ்ரீ மகாலிங்க ஐயர் அவர்களாலும், மற்றும் சில பிரபுக்களாலும், வித்வான்களாலும் ஒப்புக் கொள்ளப் பட்டதோடு, தஞ்சை சங்கீத வித்யா மகாஜன சங்கத்தின் சங்கீத பஞ்சாயத்தாராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கின்றன, மற்றும் அநேகர், நுட்பம் அறிய வேண்டுமென்று அடிக்கடி விசாரித்துக் கொண்டு மிருக்கிறார்கள்.

இப்புத்தகத்தில், பூர்வ தமிழ்மக்கள் சங்கீத சாஸ்திரத்தில் மிகுந்த தேர்ச்சியுடையவர்களாயிருந்தார்கள் என்றும், அவர்கள் தங்கள் கானத்தில் ஒரு ஸ்தாயியைப் பன்னிரண்டு சுரங்களாய்ப் பிரித்து, அவைகளில் கிரகம் மாற்றிப் பண், பண்ணியம், திறம், திறத்திறம் என்னும் சுர முறைப்படி எண்ணிறந்த இராகங்கள் பாடிவந்தார்களென்றும், அதன் மேல் ஒருஸ்தாயியை 24 அலகுகளாய்ப்பிரித்து, ச-ப முறையில் வரும் பன்னிரண்டு சுரங்களில் ஒவ்வொரு அலகு குறைத்துக் கமகமாயப் பதினாறு ஜாதிப்பண்களையும் அவற்றில் பிறக்கும் பண், பண்ணியம், திறம், திறத்திறம் என்ற 7, 6, 5, 4 போன்ற சுரபேதங்களுள்ள எண்ணிறந்த இராக பேதங்களையும் பாடினார்களென்றும், அதோடு ச-ப முறையாய் வரும் சுரங்களில் ஒவ்வொரு அலகு குறைத்துப் பாடினது போலவே (1/4),(1/2),(3/4),1 (1/4),1(1/2),1(1/3) போன்ற நுட்ப சுருதிகள் சேர்த்துக் கானம் செய்து வந்தார்களென்றும், அவைகளே தற்காலத்தில் பாடப்பட்டு வருகின்றனவென்றும், நாலு பாலைகளின் முறையில் பல இராகங்களைத் திஷ்டாந்தப்படுதித் தெளிவாகக் காட்டியிருக்கிறேன்.

(2/3),(3/4),(4/5),(5/6) போன்ற பின்ன எண்களை, ‘இதுதான் Harmonic Ratio’, ‘இவைகள் தான் Theory of Sound முறைப்படியானவை’ என்று வாதித்துப், பன்னிரண்டு சுரங்களுக்காக வழக்காடி, உலகத்திலுள்ள சங்கீத சாஸ்திரிகளெல்லாரும் தங்கள் மண்டைகளை உடைத்துக் கொள்ளும் இக்காலத்தில், நான் மாத்திரம் பூர்வ தமிழ்மக்களின் ச.ப முறைப்படி ஒரு ஸ்தாயியில் பன்னிரண்டு சுரங்கள் வருகின்றனவென்றும், அவைகள் Geometrical Progression படி வைபரேஷனிலும், வீணைத்தந்தியின் அளவிலும், சென்ட்ஸ்களிலும் ஒத்திருக்க வேண்டுமென்றும், சொல்வதை யார் ஆக்ஷேபியாமல் இருப்பார் ? அறிவுள்ள பெரியோர் அனுபோகத்திற்கு ஒத்திருக்கும் இம்முறைகளை யாழின் தந்தியில் வரும் அளவோடு ஒத்துபார்த்து ஒப்புக் கொள்வார். என்றாலும், ஆக்ஷேபனை செய்யக் கூடியவர்கள் சிலர் இல்லாமலிருக்கமாட்டார்கள். அவர்களும் முன் பின் ஆராய்ந்து அனுபோகத்தைக் கவனிப்பார்களானால் அதிக சந்தோஷ மடைவார்கள்.

‘சங்கீதத்திற்குப் புதிய உலகம் தோன்றியிருகிறது, சங்கீதத்தில் வழங்கும் சுருதிகளை அறிவதில் இவைகள் போதும்’ என்று பரோடா கான்பரென்ஸில் சொன்ன அறிவாளிகளைப் போல யாவரும் சந்தோஷப்படும் காலம் சீக்கிரம் உண்டாகும்.

ஒரு ஸ்தாயியில் வரும் பன்னிரண்டு சுரங்களில் மயக்கம் கொண்டு ‘தமிழ் மக்களுக்கு சங்கீதம் ஏது ? எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து வந்தவை’ யென்று போராடும் இக்காலத்தில், இயல், இசை, நாடகமென்னும் முத்தமிழில் ஒன்றாகிய சங்கீதத்தை, வெகு பூர்வமாகத் தமிழ்மக்கள் வழங்கி வந்தார்களென்றும், அதோடு தற்காலத்தவர் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் என்று வாதாடுபவை 22 அல்ல, இருபத்து நான்காக இருக்கவேண்டுமென்றும, இதற்கு மேலாக 48, 96 போன்ற நுட்பசுரங்களிலும் தமிழ்மக்கள் கானம் செய்து வந்தார்கள் என்றும், நான் சொல்ல வந்த இடத்தில், தமிழ்மக்களின் பூர்வ நாட்டைப்பற்றியும், அவர்கள் கல்வித் தேர்ச்சியைப்பற்றியும்,