பக்கம் எண் :

17

யும், அவர்கள் நடத்திவந்த சங்கங்களைப்பற்றியும், பாஷையைப் பற்றியும், எழுத்துக்களைப் பற்றியும், எழுத்துகளுக்குள்ள ஓசையைப் பற்றியும், சில சரித்திரக் குறிப்புகளும், யுக்திக் குறிப்புகளும் அங்கங்கே சொல்லவேண்டியதாயிற்று. அவைகளைப் பெரும்பாலும் பல பெரியோர்களின் மேற்கோள்களுடனும், அனுபவத்துடனும் சொல்லியிருக்கிறேனே யொழிய, எந்தப் பாஷையைப் பற்றியாவது, தேசத்தைப் பற்றியாவது வகுப்பாரைப் பற்றியாவது குறை சொல்ல வந்ததாக அறிவாளிகள் நினையாதிருக்கும் படிக், கேட்டுக்கொள்ளுகிறேன். சங்கீத வித்யா மகாஜன சங்கத்திற் சிலர் சொல்லய குறிப்புகளுக்கே நான் பதில் சொன்னதாக இதைப்பார்க்கும் அறிவாளிகள் எண்ணும்படிக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

1914u அக்டோபர்t 24-ஆம் தேதியில் நடந்த ஆறாவது மியூசிக் கான்பரென்ஸில் சுருதிகளைப்பற்றிச் சொல்லிய சிலர், முடிவாகத் தங்கள் அபிப்பிராயத்தைச் சொன்னதினால், நானும் என் அபிப்பிராயத்தைச் சபையார் முன் சொல்லவும் ருசுப்படுத்திக் காட்டவும் நினைத்தேன். அதோடு சுருக்கமாக அச்சடித்து சபையாருக்குக் கொடுக்கவும் விரும்பினேன். விரும்பிய ஆரம்பத்தில் நான் நினைத்த பல சுருதிமுறைகளை எழுதிக்கொண்டு வருகையில், அவைகள் விரிவதைக் கண்டு, அவைகளைப் பார்க்கும் பலருக்கும் உபயோகமாயிருக்கும் என்று நினைத்து, எழுதிக்கொண்டு வரும்பொழுதே, அப்போதைக்கப்போது தோன்றிய சுருதிக் கனுகூலமான பல அரிய விஷயங்களையும், நான் தொடர்ந்து சுருக்கி எழுதவேண்டியதாயிற்று.

இப்புத்தகம் முடிந்தபின் சுருதிகளைப்பற்றி நான் சொல்ல நினைத்ததினால், ஏழாவது கான்பரென்ஸ் கூடுவதற்குச் சில நாள் தாமதமாயிற்று. இதோடு, பரோடா கான்பரென்ஸுக்கு வரவேண்டுமென்று விரும்பிக் கேட்டுக்கொண்டதினால், அங்கே போய்ப் பூர்வ தமிழ் மக்களின் அபிப்பிராயத்தை விளங்கச் சொல்லி, வீணையில் ருசுப்படுத்திக்காட்டினேன். பெரும்பாலும் கான்பரென்ஸுக்கு வந்திருந்த யாவரும், இந்துஸ்தான் சங்கீதத்தைப் பற்றியே பேசினதினால், கர்நாடக சங்கீதத்தில் வழங்கும் நுட்ப சுருதிகளை அறிந்து, அவைகளைப்பற்றி என்ன அபிப்பிராயம் ரிப்போர்ட்டில் எழுதுவார்களென்று நான் எதிர் பார்க்கவில்லை. அதோடு ரிப்போர்ட் இன்னும் அச்சாகி வெளிவராததினால், அவர்களுடைய அபிப்பிராயம் இன்னதென்று சொல்லக்கூடாததாயிருந்தாலும், அவர்களுள் சில விற்பன்னர் எழுதிய அபிப்பிராயங்களை இப் புத்தகத்தின் கடைசியில் சேர்த்திருக்கிறேன்.

1916-ஆம் u ஆகஸ்டுமாதம் 19-ஆம் தேதி நடந்த தஞ்சை சங்கீத வித்யா மகாஜன சங்கத்தின் ஏழாவது கான்பரென்ஸில், முழுநேரமும் ‘கர்நாடக சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள்’ என்ற ஒரே விஷயத்தை விளக்கி திஷ்டாந்தப்படுத்திக் காட்ட வேண்டுமென்று, சப் கமிட்டியாரால் 1916- u சூன் t 17-ஆம்தேதி தீர்மானிக்கப்பட்டிருந்தது, அத்தீர்மானத்தின்படியே, தமிழ் நூல்களில் வரும் சங்கீத விஷயம் ஆராய்ச்சி செய்வதற்குத் தமிழ்ப் புலவர்களடங்கிய பஞ்சாயத்தார் முன்னிலையிலும், ஒரு ஸ்தாயியில் 12, 24, 48, 96 போன்ற ஓசையின் ஒழுங்குக்கு கணக்கு இப்படி இருக்க வேண்டுமென்று Geometrical Progression படி செய்த கணக்குகள் சரிதானா என்று சோதிக்க கணித சாஸ்திரிகளின் பஞ்சாயத்தார் முன்னிலையிலும், Geometrical Progression படி வீணையில கிடைக்கும் அளவில் ஒலிக்கும் நாதம் அனுபோகத்திலிருக்கும் கர்நாடன சங்கீதத்தில் வழங்கி வருகிறதா என்று பரிசோதிக்க சங்கீத வித்வான்களும் பிரபுக்களுமடங்கிய பஞ்சாயத்தார் முன்னிலையிலும், அவர்கள் விரும்பியபடி விஸ்தரித்து காட்டி, ஆக்ஷேபனைகளுக்குச் சமாதானம் சொல்லி, சுருதி விஷயங்களை விசாரிப்பதினனல் உண்டாகும் பிரயோஜனத்திற்குத் திஷ்டாந்தமாக இதுவரையும் வழக்கத்திலில்லாத இராகங்களில் புதி