தாகச்செய்யப்பட்ட பல கீர்த்தனங்களை எனது குமாரத்திகள் மரகதவல்லி அம்மாள் (Mrs. Durai Pandian) கனகவல்லி அம்மாள் (Navamoney) உதவியைக் கொண்டு வீணையிலும் வாய்ப்பாட்டிலும் பாடிக்காட்டினேன். மூன்று பஞ்சாயத்தார்களின் ரிப்போர்ட்டும் ஏழாவது கான்பரென்ஸுக்குப் பிரசிடெண்டாக விருந்த மகா- - -ஸ்ரீ V. P. மாதவராவ் C.I.E. அவர்களின் அபிப்பிராயமும் இப்புத்தகத்தின் கடைசியில் சேர்க்கப்பட்டுள்ளன. இப்புத்தக வேலை ஆரம்பித்தது முதல் அது முடிகிறவரையும் நடந்த காரியங்களை ஒவ்வொன்றாய் நினைக்கும்பொழுது, அவை யாவும் தெய்வத்தின் கிருபையாகவும், அவரால் தூண்டப் பெற்றவர்களின் செயலாகவும் தோன்றுகின்றனவேயொழிய, என்னால் ஒன்றும் நடந்த தென்று எண்ணக்கூடவில்லை. நான் என்று அகங்கரித்து எதையாவது சொல்லியிருப்பேனேயானால், அத்தவறுதல் என்னுடையதாகும். தீவிரமாய் முடியவேண்டுமென்ற அவசரத்தில் அங்கங்கே என்னை அறியாமல் விடப்பட்ட தவறுதல்களை அப்போதைக்கப்போது திருத்தியிருக்கிறேன். சுருதிகளைப்பற்றிச் சொல்லும் முக்கிய காரியத்தில் கருத்துத் தவறிப் போகவில்லை என்பதை அறிவாளிகள் கவனித்து, எழுத்துப் பிழைகளையும், சொற்பிழைகளையும் மன்னிக்கும்படி மிகவும் கேட்டுக்கொள்ளுகிறேன். இதுவரையும், உலகத்தவர் எவரும் கண்டும் கேட்டுமிராததும் ஒரு ஆரோகண அவரோகணத்தில், பலவித அம்சங்களையும் கவனித்து, இனிமைபெற இராக சஞ்சாரம் செய்யும் முறையும், கீதமும் கீர்த்தனமும் எழுதும் முறையும், அவைகளில் ஜீவ சுரம் இன்னதென்று காணும் முறையும் யாவரும் அறிய புஸ்தக ரூபமாய் வெளியிட உத்தேசித்திருந்த நான், அவற்றிற்குரிய முக்கிய ஆதார விதிவகைகள் யாவும், சிலப்பதிகாரத்தில் அங்கங்கேசொல்லப்படுகிறதை யறிந்து, மிகவும் சந்தோஷமடைந்தேன். அம்முறைகள் யாவையும் பற்றிச் சொல்லும் இரண்டாம் மூன்றாம் புத்தகங்கள் கூடிய சீக்கிரம் வெளிவரும். சுருக்கமாகச் சொல்லுமிடத்து, சரித்திர காலம் ஆரம்பிக்கிறதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவுள்ள லெமூரியா நாடு தமிழ் நாடாயிருந்ததென்றும், அதில் வசித்துவந்தவர்கள் தமிழர்களாயிருந்தார்களென்றும், லெமூரியாவில் பேசப்பட்டுவந்த பாஷை தமிழாயிருந்ததென்றும், அது இயல், இசை நாடகமென்னும் முத்தமிழாக வகுக்கப்பட்டு இலக்கண வரம்புடன் மிகுந்த தேர்ச்சியுடையதாயிருந்ததென்றும், அதன்பின்னுண்டான பிரளயங்களில் அந்நாடு கொஞ்சம் கொஞ்சமாக கடலால் விழுங்கப்பட்டபின், பலகலைகளும் இசைத் தமிழைப்பற்றிச் சொல்லும் அரிய நூல்களும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, தற்காலம் அனுபோகத்திலிருக்கும் சொற்பமுறை மிஞ்சியிருக்கிறதென்றும் தெளிவாக அறிவோம். இற்றைக்குச் சுமார் 1850 வருடங்களுக்கு முன்னிருந்த இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தாலும அதன் உரையாலும் சொற்ப பாகம் காண்கிறோம். இதில் உலகத்தவர் எவரும் தற்காலம்வரை கண்டுகொள்ளாமலிருக்கும் சுரம், சுருதிகள், இராகங்கள், இராகங்களுண்டாகும் முறைகளைப் பற்றி அங்கங்கே சுருக்கமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறதென்று காண்போம். பூர்வ தமிழ்மக்களின் சங்கீத முறையில் சிலவற்றை எழுதவந்த மற்றவர்கள் பூர்வ முறைக்கும் அனுபோகத்திற்கும் ஒத்துவராத சில முறைகளையும் சுருதிக் கணக்குகளையும் எழுதி வைத்ததினால் இவ்வளது தூரம் பலர் பலவாறாக நினைக்க இடமுண்டாயிற்று என்று தெளிவாகக் காண்போம். உலகத்தில் இதுவரையும் சங்கீதத்தைப்பற்றி எழுதிய சாஸ்திரங்கள் யாவற்றிலும் தமிழ் மக்களின் கானமுறை மிக மேலானதென்றும் என்ற தேசத்தவரும் நாளதுவரை அறிந்திராதவையென்றும் யாவரும் சாஸ்திர முறையாய் ஒப்புக்கொள்ளக் கூடியதென்றும் நாளது
|