நெ. | பெயர். | பங்கு. |
| 494. | நாவிசஞ்செய்ய இருவருக்கு செயதரன் நெத்தானன் ஆன ராஜராஜபெருநாவிசனுக்கு | பங்கு ஒன்று |
| 495. | திரு ஒருவனுக்கும் கீழ்ஆள் இரண்டுக்கும் துணையன் ஆதித்தனானசெம்பியன் கொற்ற பெருங்கணிக்கு | பங்கு இரண்டு |
| 496. | திரு ஒருவனுக்கும் கீழ்ஆள் இரண்டுக்கும் பராந்தகன் பாண்டியகுலாசனிஆன ராஜராஜ கணிதாதி ராஜனுக்கு | பங்கு இரண்டு |
| 497. | கொலினமைசெய்வார் இருவருக்கு அரையன் பருவத்திரனான பஞ்சவன்மங்கலப்பெரையனுக்கு | பங்கு மூன்று |
| 498. | அம்பட்டன் பொன்சடங்கலியான ராஜராஜ பிரயோகதரையனுக்கு | பங்கு ஒன்று |
| 499. | தையன் ஒருவனுக்கு தேவகவாலியான வீரசோழபெருந்தையானுக்கு | பங்கு ஒன்று |
| 500. | தையன் ஒருவனுக்கு ஒன்றுக்கு சிப்பன் மழபாடியான கேரளாந்தகபெருந்தையானுக்கு | பங்கு ஒன்று |
| 501. | ரத்னத்தையான் ஆச்சன்கருந்திட்டைக்கு | பங்கு ஒன்றரை |
| 502. | கன்னான் ஒருவனுக்கு இடைக்கரைகாரியான க்ஷத்திரியசிகாமணிபெருங் கன்னனுக்கு | பங்கு ஒன்று |
| 503. | தச்சாசாரின் ஒன்றுக்கு பங்கு ஒன்றரையும் ஆளிரண்டுக்கு பங்குஒன்றரையுமாக வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜ ராஜபெருந்தச்சனுக்கு | பங்கு மூன்று |
| 504. | தச்சு ஒன்றுக்கு குணவன்மதுராந்தகனான நித்தவினோதபெருந்தச்சனுக்குபங்குமுக்காலும் - ஒன்றுக்கு இலத்திசடையனானகண்டராதித்த பெருந்தச்சனுக்கு | பங்கு முக்கால் |
| 505. | பாணன் உத்தமன் சூற்றியான அரிகுலகேசரிச்சாக்கைக்கு | பங்கு ஒன்றரை |
| 506. | பாணன் உத்தமன் ஐயாறன் அறிஞ்சிகைக்கு | பங்கு ஒன்றரை |
| 507. | பாணன் உத்தமன் அபராயிதன்வடவாயிலான பல்லவன்சாக்கை | பங்கு ஒன்றரை |
| 508. | பாணன் உத்தமன் வடுவூர் அறிஞ்சிகைக்கு | பங்கு ஒன்றரை |
| 509. | கண்காணிதட்டாண்மை செய்ய ஓராளிட்டு பணிசெய்வித்துக் கொள்ளப்பெறுவானாக உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் சிறு தனத்து கண்காணிதட்டான் கூத்தன்கணவதியானக்ஷத்திரியசிகாமணி பெருந்தட்டானுக்கு | பங்கு ஒன்று |
ராஜராஜ சோழனே தஞ்சை பெரியகோயிலைக் கட்டினாரென்பது "நாம் எடுப்பித்ததிருக் கற்றளி" என்ற அவரது சாசனத்திற்காணும் வாசகத்தால் தெரிகிறது.அதோடு அவரும் அவர்பட்டஸ்திரீகளும் அவர்குடும்பத்தாரில் சிலரும் தங்கள் சொந்தபொருள்களினால் தஞ்சாவூர் திருவையாறு முதலிய கோயில்களுக்கு அநேக கைங்கரியங்களும் தர்மங்களும் செய்திருக்கிறார்களென்று மற்றும் சில சாசனங்களால் அறிகிறோம். இவர் கி.பி.985-1013 வரையும் ஏறக் குறைய 29-வருஷம் ஆண்டார் என்று சொல்லப்படுகிறது. தான் உயிரோடிருக்கும் காலத்தில் தன் குமாரன் ராஜேந்திரனுக்கு 1010-ல் பட்டங்கட்டித்தான் மேல்பார்த்துக்கொண்டு வந்தார்.அவருடைய அரசாட்சியின் கடைசியில் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டிருக்கவேண்டும். தன் இறுதிகாலத்தில் இன்னும் நான் ஜெயிப்பதற்கு நாடுகளில்லையே யென்று அவர் வருத்தப்பட்டார் என்பதைக்கொண்டும் சிறுபிராயத்திலேயே பட்டத்துக்கு வந்ததைக்கொண்டும் விருத்தாப்