பக்கம் எண் :

171
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

பியத்திற்கு முன்னாலேயே அவர் இறந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.தான் இறக்க 3 வருஷங்களுக்குமுன் மகனிடத்தில் ராஜ்யத்தை ஒப்புவித்துவிட்டுக் கோயில் கட்டுமான வேலைகளில் தன் முழு நேரத்தையும் செவழித்திருக்கவேண்டும்.அப்படியில்லாதிருந்தால் பல யுத்தங்களும் படையெடுப்புகளுமுள்ள காலத்தில் கல் கிடைக்காத தஞ்சையில் பென்னம் பெரிய கல்லினால் ஆகிய நந்தியும் கோபுரத்தின் உச்சியில்பாவுதற்கு 251/2 அடிசதுரம் 80 டன் கனமுள்ள ஒரே மூடுகல்லும் சேகரித்துச் செய்யமுடியாது என்று நினைக்கிறேன்.மேலும் கல் வேலைசெய்த சிற்பிகளுக்கும் சுதைவேலை செய்துவந்த கொத்தர்களுக்கும் அவர்கள் வேலைசெய்யும் காலத்தில் தாமும் கூடவேயிருந்து தின்பண்டமும் தாம்பூலமும் கொடுத்து உற்சாகப்படுத்திவந்த தாகவும் தெரிகிறது.ஒரு சமயத்தில் மிக அருமையான வேலைசெய்து கொண்டிருந்த சிற்பாசாரி ஒருவன் தாம்பூலத்திற்காக தன் வேலைக்காரனிடம் பின்னால் கைநீட்டும் சமயத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த இவர் அறிந்து தான் தாம்பூலம் மடித்துக்கொடுத்ததாகவும் அது சற்று வித்தியாசப்பட்டிருந்ததையறிந்த சிற்பாசாரி திரும்பிப்பார்ப்பது மகாராஜன் என்று கண்டு வணங்கினான் என்றும் கர்ணபரம்பரையாய் நாளது வரையும் சொல்லிக் கொள்ளப்படுகிறது.இதைப்போல் இன்னும் அநேகசங்கதிகளைச் சொல்லக் கேள்விப்படுகிறோம்.

இன்னும் மேற்கண்ட சாசனங்களை நாம் கவனிக்கையில் ராஜர்களுடைய வீரம், அவர்களைடந்த வெற்றி, அவர்களுக்குரிய பட்டப்பெயர்கள் முதலியவைகளை சாசனத்தின் தலைப்பில் சொல்லப்படும் மெய்க்கீர்த்தியில் காண்கிறோம்.அதன் பின் கோயிலில் ஆடுவார், பாடுவாராக ஊழியஞ்செய்யும் ஊழியக்காரர்களும் அவர்கள் தினம் பெறும் சம்பளம் அல்லது அக்கணக்கின்படி வருஷ சம்பளம் இவ்வளவென்று அவர்கள் குடியிருக்கும் மனைகளின்னதென்றும் சொல்லப்படுகிறது.அம்முறையில் ஒருவனுக்குப்பின் ஒருவன் தலைமுறையாய்ப் பெறும் விவரமும் அதுதவறின் இன்னார் பெறவேண்டுமென்ற விவரமும் சொல்லப்படுகிறது.இவைகள் யாவையும் சாசனத்தில் விவரமாய்க்காணலாம்.

இதில் முதல் சாசனத்தில் நாற்பத்தெட்டு பிடாரர்களும் கொட்டி மத்தளம் வாசிப்பான் ஒருவனும் உடுக்கை வாசிப்பான் ஒருவனும் ஆக ஐம்பது பெயர்கள் சொல்லப்படுகின்றனர்.இவர்கள் ஒரு நாளைக்கு முக்குறுணி அல்லது ஆறு மரக்கால் வீதம் சம்பளம் பெற்று கோயிலில் ஊழியஞ்செய்து வர நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். திருப்பதிகம் விண்ணப்பஞ்செய்ய இவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களென்று அறிகிறோம்.திருப்பதிகம் என்பது அப்பர், சுந்தர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரையர் போன்ற பெரியவர்கள் தங்கள் காலத்தில் தரிசித்த தெய்வத்தையும் ஸ்தலங்களையும் புகழ்ந்து பாடிய பத்துப் பாடல்களாம்.அவைகளே தற்காலத்தில் தேவாரம், திருவாசகம் என்று அழைக்கப்படுகின்றன.இவைகளைக் கோயில் பூஜா காலங்களில் பண்ணோடும் பக்க வாத்தியத்தோடும் பாடும்படி கட்டளை ஏற்படுத்தியதாகத் தெளிவாக அறிகிறோம்.இவை South Indian Inscriptions Vol.II Part III ல் 252-ம் பக்கத்தில் சொல்லப்படுகின்றன.

இரண்டாவது சாசனத்தின் ஆரம்பத்தில் நடனம் செய்கிறவர்களுடைய பெயர் காணப்படுகின்றது.இவர்கள் 400-பேர் எனத் தெரிகிறது.இவர்கள் இன்னின்ன ஊர்களிலிருந்து வந்தவர்களென்றும் இதன்முன் இன்னின்ன கோயில்களில் ஊழியஞ்செய்தவர்களென்றும் காண்கிறோம்.சாசனத்தில் சோழமண்டலம் தளிச்சேரிகளினின்று கொண்டுவந்து ஏற்றின தளிச்சேரிப் பெண்டுகளுக்கு என்று சொல்லுவதைக் கவனிக்கையில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் ராஜராஜ சோழனால் கட்டப்படுதற்கு முன்னாலேயே திருக்காரோணம் நாகப்பட்டணம் ஆலம்) திருவிட மருதூர், திருவாரூர், தஞ்சைமாமணிக்கோயில் (விண்ணாற்றங்கரையிலுள்ள நீலமேகப்பெருமாள் கோயில்) திருமாகாளம், கடம்பூர், திருமறைக்காடு, விடையபுரம், வேளூர், திருவையாறு, தலை