பக்கம் எண் :

172
தஞ்சாவூர் பெரியகோயில் சாசனத்தில் கவனிக்கவேண்டிய முக்கிய குறிப்புகள்

யாலங்காடு, நன்னிலம், காவேரிப்பூம்பட்டினம், பழையாறு, கோட்டூர், திருச்சோற்றுத்துறை, உத்தமதானிபுரம், நேமம், பாச்சில், திருவேதிகுடி, திருநெய்த்தானம், திருச்செந்தூர், பழுவூர், பந்தநல்லூர் முதுலிய பலஸ்தலங்களிலிருந்து நடன கன்னிகைகளைக் கொண்டுவந்து கோயில் ஊழியத்துக்கு நியமித்ததாக நாம் காண்கிறோம்.இதினால் இவர்காலத்துக்கு முன்னாலேயே அதாவதுசுமார் 1000-வருஷங்களுக்கு முன்னாலேயே மேற்கண் ஊர்களில் சிவ ஆலயங்களும் விஷ்ணு ஆலயங்களு மிருந்ததாகவும் அவைகளில் நடன கன்னிகைகளிருந்ததாகவும் வாத்தியக்காரர் களுமிருந்ததாகவும் சொல்லத் தெளிவாயிருக்கிறது.ஆனால் இதன் முன்னாலேயே முச்சங்கங்களிருந்தகாலத்தில் ஆலயங்களிலும் அரண்மனைகளிலும் ஆடல் பாடல்களிருந்ததாக இதன்முன் பார்த்திருக்கிறோம்.இவ்வூர்நக்கன் என்றும் இத்தளிநக்கன் என்றும் தஞ்சாவூர்நக்கன் என்றும் அடிக்கடி வருவதை நாம் கவனிக்கையில் தஞ்சைமாநகரத்திலே இவ்வாலயம் கட்டுவதற்குமுன் அதாவது ராஜராஜசோழன் காலத்திற்கு முன்னாலேயே அநேக நடனகன்னிகைகளும் சங்கீதக் காரர்களு மிருந்தார்களென்பதைத் தெளிவாக அறிகிறோம்.தளிச்சேரி என்பது கோயிலைச் சேர்ந்த குடியிருப்புக்குப் பெயர்."நாம் எடுத்த கற்றளி" என்பதில் நாம் கட்டுவித்த கல்கோயில் என்று பொருள் படுகிறது.ஆகையினால் இத்தளி என்பதற்கு இந்தக்கோயில் என்பது அர்த்தம்.தளிச்சேரி என்பது கோயிலைச் சேர்ந்த தெரு.

இதன் பின் 401-ம் லக்கமுதல் 406-ம் லக்கமுடிய உள்ளபேர்கள் நடனம் கற்றுக் கொடுக்கிறவர்களாகவும் நடனம் செய்துவைக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள்.இவ்வார்த்தையையே நட்டுவனென்றும் அண்ணாவி என்றும் வழங்குகிறதை நாம் பார்க்கிறோம்.

கானபாடி ஐவர். இவரில் 413-ம் லக்கத்தில் மூவரும் 414-ம் லக்கத்தில் இருவரும் சொல்லப்படுகின்றனர். 415-முதல் மூன்று லக்கங்களில் முகவீணைக்காரர் சொல்லப்படுகிறார்கள். 422-முதல் இரண்டு லக்கங்களில் உடுக்கைவாசிக்கிறவர்கள் பேர் சொல்லப்படுகிறது. 424-425 இரண்டு லக்கங்களில் வீணைவாசிப்போர் பெயர் காணப்படுகிறது. 426-ல் ஆரியம்பாடுவோர் மூவர் என்று அறிகிறோம். 427-முதல் 4-லக்கங்களில் தமிழ்ப் பாடுவோர் பெயரும் 431-முதல் இரண்டுலக்கங்களில் கொட்டிமத்தளக்காரர் பெயரும் 433-முதல் மூன்று லக்கங்களில் முத்திரைச்சங்கு ஊதுவோர் பெயரும் 436-முதல் 16 லக்கங்களில் பக்கவாத்தியக்காரர் பெயரும் 463-முதல் ஐந்து லக்கங்களில் கட்டியம் கூறுவோர் பெயரும் 468-469-ல் காந்தர்வர் இருவர்பெயரும் சொல்லப்படுகின்றன. 478-முதல் ஆறுலக்கங்களுக்கு எதிரில் மேளம் வாசிப்பவர் 66 பேர்களுக்கு பங்கு சொல்லப்படுகிறது.

இது தவிர விளக்குப்போடுகிறவர்கள், நீர் தெளிப்பவர்கள், எடுபிடி சாமான் தூக்குகிறவர்கள், குசவன், வண்ணான், நாவிதன், சோதிடன், கொல்லன், தையான், கன்னான், தச்சன், தட்டான், பாணன், கணக்கர் முதலிய கோயில் ஊழியக்காரர் பெயரும் அவர்கள் நடந்து கொள்ளவேண்டிய விவரமும் பங்கும் சொல்லப்படுகின்றன.

பங்கு ஒன்று என்பது இரண்டாவது சாசனத்தில் கண்ட "பங்குவழிபங்கு ஒன்றினால் நிலன் வேலியினால் ராஜகேஸரியோடொக்கும் ஆடவல்லான் என்னும் மரக்காலால் நெல்லு நூற்றுக்கலமாகவும்" என்ற வசனத்தைக் கவனிக்கையில் தற்காலத்தில் 100 கலமாகிறது. அது அக்காலத்தில் ஒரு வேலி நிலத்தின் ஒரு வருஷ வரும்படியாம். அது குடிவாரம்போக என்று தோன்றுகிறது. மேல்வாரமாகிய இந்நூற்றுக்கலமும் வித்வான்களுக்கும் மற்றும் மானியக்காரருக்கும் நாளது வரையும் வழங்கி வருகிறதை நாம் காணலாம். இரண்டு பங்குக்காரர் வருஷம் 200 கலமும் ஒன்றரை, ஒன்று, அரைபங்குள்ளவர்கள் தங்கள் பங்குவீதமாகவும் வாங்கிக்