கொண்டு ஊழியஞ்செய்துவந்தார்களென்று தோன்றுகிறது. இதில் வீணை வாசிப்போர் இருவருக்குபங்கு சொல்லப்படுகிறது. பூர்வகாலத்திலுள்ள பெரிய கோயில்கள் ஒவ்வொன்றிலும் இப்படியே சம்பளங்கள் ஏற்படுத்தி வைத்திருந்ததாகக்கேள்விப்படுகிறோம். அதோடு ராவணவாகனம் என்ற வெள்ளி வாகனத்தில் பாவணன் வீணை வாசிப்பதையும் நாம் பார்த்திருப்போம். பாணபத்திரனுக்காக விறகு சுமக்கும் ஆளாய் சாதாரி ராகம்பாடி எமநாதனை விரட்டியது பரமசிவனென்று படித்திருக்கிறோம். வீணாகானத்தில் பிரியமுள்ள பரமசிவனுக்கு அவருடைய ஆலயங்களில் வீணாகானம் வாசிக்கத் திட்டஞ்செய்திருப்பது பொருத்தமாகவே தோன்றுகிறது. மேலும் வாத்தியங்களில் இனிமையும் உயிருமுடையது வீணையென்று யாவரும் கொண்டாடுகிறோம். அப்படியே பரமசிவனும் வீணாகானப்பிரிய னென்று சொல்லப்படுகிறார். இவ்வீணை யையும் இதன் அங்கக்கூறுபாடுகளையும் பற்றி பின்னே பார்ப்போம். இதன் பின் ஆரியம் பாடுவார் மூவரைப்பற்றி சாசனத்தில் காண்கிறோம். ஆரியம் என்பது சமஸ்கிருதம் என்றும் சமஸ்கிருதத்திலுள்ள பாட்டுக்களைப் பாடுகிறவர்களை ஆரியம் பாடுவாரென்றும் இங்கே சொல்லப்படுகிறதாக நினைக்கவேண்டும். ஆனால் இவர்களை வேதம் சொல்லுகிறவர்களென்று நினைக்கஏதுவில்லை. ஏனென்றால் செம்பியன் வாத்தியன் மாராயனுக்கு என்ற சொல் பிராமணர்களைக் குறிக்கவில்லை. 418, 420, 421 இலும் கட்டியம் கூறுவோர்களுக்கும் 463, 464, 465, 466 லக்கங்களிலும் நட்டுவம் செய்பவருக்கு 401-ம் லக்கத்தில் மாராயன் என்ற பெயர்கள் வருகின்றன. நட்டுவனாகவும் கட்டியம் சொல்பவனாகவும் பாட்டு பாடுகிறவனாகவும் வருகிறவர்கள் இன்னார் என்றும் பிராமணர்கள் இவ்வேலையில் வரமாட்டார்களென்றும் நாம் திட்டமாய் அறிவோம். ஆகையினால் ஆரியம் பாடுவாரென்பது சமஸ்கிருத பாட்டுப்பாடுகிறவர்கள் என்று தோன்றுகிறது. தமிழ் பாடுவோர் நால்வர், இவர்கள் சந்நதி முன்னிருந்து தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி முதலிய தெய்வஸ்தோத்திரங்களை மனமுருக்கும் தமிழ்ப்பண்களோடு பாடிக் கொண்டிருப்பார்கள். தெய்வத்தை வணங்கப்போகிறவர்களும் அப்படியே தங்களுக்குத் தெரிந்த பண்களை மேற்கண்வர்களோடு சேர்ந்தும் தனித்தும் பாடுகிறவழக்கம் இன்றைக்குமிருக்கிறது. இதன்பின் 431-ல் கொட்டிமத்தளம் ஒன்றுக்கு காந்தர்வனுக்கு என்றும் 432-ல் காந்தர்வ துரைக்காவாலிக்கென்றும் 468-ல் தளிச்சேரி பெண்டுகளுக்கும் காந்தர்விகளுக்கும் நாயகஞ்செய்ய என்றும் வருவதைக் காண்கிறோம். இதினால் காந்தர்வர்கள் பாடுகிறவர்களென்று தெரிகிறது. கந்தர்வம் என்று பாட்டுக்குப்பெயர். இவ்வார்த்தை வழக்கத்திலில்லாமல் போயிற்றென்று காண்கிறோம். இச்சாசனத்தில் அடிக்கடி காணப்படும் பெரையன், செம்பியன், மாராயன், உவைச்சன், நட்டவம், நக்கன் என்னும் வார்த்தைகளில் சில திரிந்து தற்காலம் ஒச்சன் கட்டுவன் என்று வழங்கியும் சில வழக்கத்திலில்லாமல் போனதும்போல இதுவுமிருக்கவேண்டும். கந்தர்வர்களும், கந்தர்விகளும் மிகுந்த பாடுந் திறமையுடையவர்களாயும் அழகுள்ளவர்களாயுமிருப்பவர்கள். அதுபற்றி அவர்களை தேவலோகத்திலிருந்து வந்தார்களென்றும் தேவர் சபையில் பாடினார் என்றும் புராணங்களில் பெருமையாகச் சொல்லியிருக்கிறதே யொழிய மற்றல்ல. தேவர் சபையில் கந்தர்வர்கள் பாடினார் என்றும் நடனமாதர்கள் ஆடினார்களென்றும் கேள்விப்படுவோமே யொழியமற்றவர் ஆடினார் பாடினார் என்று கேள்விப்படமாட்டோம். ஆகையினால் கந்தர்வர்கள் பாட்டையே தங்கள் ஜீவனமாகக்கொண்ட ஒரு வகுப்பார் என்று தெரிகிறது. இவர்கள் தஞ்சாவூர் கோயில் ஊழியத்திலும் அமர்ந்திருந்ததாகக் காண்கிறோம். இவர்கள் தேவலோகத்திலுள்ளவர்களல்ல, பூலோகத்திலுள்ளவர்களே, தற்காலமுமிருக்கிறார்கள்.
|