ஆல். ‘Kavavu’ means embracing. இளம். இவையெல்லாம் குறிப்பு. வ-று :1‘கொடும்பூண் கவைஇய கோல மார்பு’ என்றக்கால், கொடும்பூண் அகத்திட்ட கோல மார்பு என்பதாம். சேனா (அரியே ஐம்மை, கவவகத்திடுமே). இ-ள் : ‘அரிமயிர்த் திரள் முன்கை” (புறம். 11) எனவும், 2 ‘கழூஉ விளங் காரம் கவைஇய மார்ப’ (புறம். 19) எனவும், அரியும் கவவும், ஐம்மையும் அகத்தீடுமாகிய குறிப்புணர்த்தும், எ-று. தெய். இ-ள் : கவவு என்னுஞ்சொல் அகத்திடுதல் என்பதன் பொருள்படும், எ-று. உ-ம் : ‘கழூஉ விளங்காரம் கவைஇய மார்பே’ (புறம். 19) நச் இதுவுமது. இ-ள் : கவவு அகத்திடுமே கவவு அகத்தீடாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. உ-ம் : ‘கவவுக் கடுங் குரையள் காமர் வனப்பினள்’ (குறுந். 132) எனவரும். இது ‘கழூஉ விளங்காரம் கவைஇய மார்பே’ (புறம். 19) என எச்சமாங்கால் திரிந்து நிற்கும். வெள். (அரியே யைம்மை, கவவகத் திடுமே)
1. பொருள் : வளைந்த அணிகள் தழுவிய அழகிய மார்பு. அகத்திடுதல் என்பது தழுவுதல். இருகைகளாலும் தழுவும் போது தழுவப்படும் பொருள் அவற்றின் உட்படுதல் அகத்திடுதலாம். cover எனும் ஆங்கிலச் சொல்லை ஒப்பு நோக்குக. 2. பொருள் : கழுவப்பட்டு விளங்கும் மாலையால் தழுவப்பட்ட மார்பு. |