உறுப்பியல் - தொடை ஓத்து 207 |
இஃது அசையந்தாதியும் எழுத்தந்தாதியும் மயங்கி வந்த மண்டல மயக்கந் தாதி. இதனை எழுத்தந்தாதி என்று வேண்டுவாரும் உளர்.
[கலி விருத்தம்]
‘ஆதியங் கடவுளை அருமறை பயந்தனை
போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை
போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கிய
சேதியஞ் செல்வ! நின் றிருவடி பரவுதும்’.1
இஃது அடியந்தாதி.
‘இரங்கு குயின்முழவா’ என்னும் பாட்டினுள் இடையிட்ட அடியந்தாதி வந்தது.
[தரவு கொச்சகம்]
‘கழிமலர்ந்த காவிக் களிவண்டு பாடக்
குழிமலர்ந்த நீலம் குறுமுறுவல் கொள்ளும்
குழிமலர்ந்த நீலம் குறுமுறுவல் கொள்ளப்
பொழில்மலர்ப்பூம் புன்னையின் நுண்டாது சிந்தும்’.
இதுவும் இடையிட்ட அடியந்தாதி.
பன்மணி மாலையும், மும்மணிக் கோவையும், உதயணன் கதையும், தேசிக மாலையும் முதலா உடைய தொடர்நிலைச் செய்யுட்களும் அந்தாதியாய் வந்தவாறு கண்டு கொள்க.
செந்நடை எழுத்தந்தாதியும், செந்நடை அசையந்தாதியும், மண்டலச் சீரந்தாதியும், மண்டல இடையிட்ட அடியந்தாதியும், செந்நடை இடையிட்ட அடியந்தாதியும் வந்தவழிக் கண்டு கொள்க.
மோனையாய் வந்தன மோனையந்தாதி, எதுகையாய் வந்தன எதுகையந் தாதி, முரணாய் வந்தன முரணந்தாதி, இயைபாய் வந்தன இயைபந்தாதி, அளபெடையாய் வந்தன அளபெடையந்தாதி என இவ்வாற்றால் வந்த வகையாற் பெயர் கொடுத்து வழங்கப்படும்.
1 சூளா. இரத. 96.
|