இத்தொடக்கத்தன செந்நடைச் சீரந்தாதி.
[நேரிசை ஆசிரியப்பா]
‘உலகுடன் விளக்கும் ஒளிகிளர் அவிர்மதி [அசை]
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை [சீர்]
முக்குடை நீழற் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை [அடி]
அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தரஃ தென்ப [எழுத்து]
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே’.1
இது மண்டல மயக்கந்தாதி.
[நேரிசை ஆசிரியப்பா]
பொன்னலர் துதைந்த பொரிதாள் வேங்கை [சீர்]
வேங்கை ஓங்கிய வியன்பெருங் குன்றம்
குன்றத் தயலது கொடிச்சியர் கொய்புனம் [அசை]
புனத்தயற் சென்ற சிலம்பன்
சிலம்படி மாதர்க்கு நிறைதோற் றனனே’.
இது சீரந்தாதியும் அசையந்தாதியும் வந்த செந்நடை மயக்கந்தாதி.
[நிலைமண்டில ஆசிரியப்பா]
‘வேத முதல்வ! ஏதமில் அகணித!
தத்துவர் தலைவ! முத்தி முதல்வ!
வழுவா ஞானக் குழுவுடன் வந்து
துன்னாப் பாவ மன்னரை அவித்த
தரும நேமிப் பரமனென1 வியந்து
துன்னின ராகி மின்னென மிளிர்ந்த
தகைமுடி சாய்த்துச் சத்துவர்2 வணங்குவ
வகைமுடி வில்லினை5 வாடுக எனவே’.2
1 திருப்பா மாலை (இதி்ல் எழுத்து அசை சீர் அடி என்னும் நான்கும் மயங்கி ‘உலகு’ என்னும் முதற்சீர் ‘உலகே’ என்னும் ஈற்றுச் சீரோடு மண்டலித்து முடிந்தமை காண்க.’)
2 திருப்பா மாலை.
பி - ம். 1 பிரமனென 2 சாய்த்துச் சுத்துவர் 5 வல்வினை.
|