உறுப்பியல் - தொடை ஓத்து 205 |
அவற்றுட் சில வருமாறு:
[நிலைமண்டில ஆசிரியப்பா]
‘வேங்கையஞ் சாரல் ஓங்கிய மாதவி
விரிமலர்ப் பொதும்பர் மெல்லியர் முகமதி
திருந்திய சிந்தையைத் திறைகொண் டதுவே. 1
இது மண்டல எழுத்தந்தாதி.
[நிலைமண்டில ஆசிரியப்பா]
‘பேதுற விகந்த பெருந்தண் காவிரி
விரிதிரை தந்த வெறிகமழ் வாசம்
சந்தனக் குழப்பு முலைமிசைத் தடவிய
வியனறுங் கோதைக்கு மெல்லிதால் நுசுப்பே’.
இது மண்டல அசையந்தாதி.
[நேரிசை ஆசிரியப்பா]
‘முந்நீர் ஈன்ற அந்நீர் இப்பி
இப்பி ஈன்ற இலங்குகதிர் நித்திலம்
நித்திலம் பயந்த நேர்மணல் எக்கர்
எக்கர் இட்ட எறிமீன் உணங்கல்
5. உணங்கல் கவரும் ஒய்தாள்2 அன்னம்
அன்னம் காக்கும் நன்னுதல் மகளிர்
மகளிர் கொய்த மயங்குகொடி அடம்பி5
அடம்பி அயலது3 நெடும்பூந் தாழை
தாழை அயலது வீழ்குலைக் கண்டல்
10. கண்டல் அயலது முண்டகக் கானல்
கானல் அயலது காமரு நெடுங்கழி
நெடுங்கழி அயலது நெருங்குகுடிப்4 பாக்கம்
பாக்கத் தோளே பூக்கமழ் ஓதி
பூக்கமழ் ஓதியைப் புணர்குவை யாயின்
15. இடவ குடவ தடவ ஞாழலும்
இணர துணர்புணர் புன்னையும் கண்டலும்
கெழீஇய கானலஞ் சேர்ப்பனை இன்றித11
தீரா நோயினள்?? நடுங்கி
வாராள் அம்ம வருதுயர் பெரிதே!’
பி - ம். 1 திறைகொண் டனவே. 2 செந்தாள். 5 அடம்பம் 3 அடம்பினயலது. 4 நெடுங்குடிப். 11 இயின்றித். 22 நோயென
|