அள்ளூர் நன்முல்லை. (பி-ம்.) 2. ‘நெஞ்சுணப்'; 4. ‘விருவர் தமிடையே'; 5. ‘முழங்கு'.
(ப-ரை.) பாக, அஞ்சுவது அறியாது - அஞ்சுதலைஅறியாமல், அமர் துணை தழீஇய - நாம் விரும்பும்தலைவியைத் தழுவும் பொருட்டு, நெஞ்சு - என் நெஞ்சு,நம் பிரிந்தன்று - நம்மைப் பிரிந்து சென்றது; ஆயினும் -ஆனாலும், எஞ்சிய - குறைபாடாக உள்ள, கை பிணிநெகிழின் - கையாற்றழுவுதல் நெகிழுமாயின், அஃது எவன் -நெஞ்சு சென்று தழுவிய அதனால் பயன் யாது? இருவாம்இடை - யானும் தலைவியுமாகிய இருவருக்கும் இடையில்உள்ள இடங்கள், நன்றும் சேய - மிக்க சேய்மையைஉடையன; முயக்கிடை மலைவு - தலைவியோடு சேர்தற்குஇடையிலே உள்ள தடையாகிய, கோள் புலி - கொலைசெய்யும் புலியானது, மா கடல் திரையின் முழங்கி - கரியகடலின் அலையைப் போல ஆரவாரம் செய்து, வலன