பக்கம் எண் :


457


யலைத்த கையே" (அகநா. 145:21-2); "அன்னை, அலையுமலை" (ஐந். எழு. 3); "அன்னையுங் கோல்கொண் டலைக்கும்" (முத்.66.)

    3-5. தலைவன் தேர் வந்ததெனக் கேட்டு அன்னை அலைத்தல்: "பொங்குகழி நெய்த லுறைப்ப வித்துறைப், பல்கால் வரூஉந் தேரெனச், செல்லா தீமோ வென்றனள் யாயே" (ஐங். 186:3-5); கைந்நிலை, 24. "கொடிதறி பெண்டிர் சொற்கொண் டன்னை, கடிகொண் டனளே தோழி ... நிலவுமணற் கொட்குமோர் தேருண் டெனவே" (அகநா. 20:12-6.)

    6. பின்னுவிடு கதுப்பு: (குறுந். 353:6); "பின்னகம்" (அகநா. 9:22.)

    7. இளையர்: குறுந். 258:6, 275:6; தொல். கற்பு. 29.

(246)
  
(தலைவன் விரைவில் வரைந்து கொள்வான் என்று தலைவியிடம் தோழி கூறியது.)
 247.   
எழின்மிக வுடைய தீங்கணிப் படூஉம் 
    
திறவோர் செய்வினை யறவ தாகும் 
    
கிளையுடை மாந்தர்க்குப் புணையுமா ரிவ்வென 
    
ஆங்கறிந் திசினே தோழி வேங்கை 
5
வீயா மென்சினை வீயுக யானை 
    
ஆர் துயி லியம்பு நாடன் 
    
மார்புரித் தாகிய மறுவி னட்பே. 

என்பது (1) கடிநகர்த் தெளிவு விலங்கினமை யறிய, தோழி கூறியது.

     (கடிநகர் - காவற்பட்ட மனையில். தெளிவு விலங்கினமை - தலைவன் தான் கூறித் தெளித்த சொல்லினின்றும் மாறுபட்டமையை, அறிய - தலைவி வாயிலாக அறியும் பொருட்டு.)

(2) வரைவுடன் பட்ட தோழி தலைமகட்குக் கூறியதூஉமாம்.

     (வரைவுடன் படுத்திய வென்பதே பொருத்த முடையது.)

சேந்தம் பூதன்

    (பி-ம்.) 1. ‘தீங்கனிப்’, ‘கணிப்புகூஉம்’; 3. ‘புனையுமாரில்லென’;5. ‘யாஅமென்சினை’.

    (ப-ரை.) தோழி-, வேங்கை - வேங்கை மரத்தினது, வீயா மென் சினை வீ உக - கெடாத மெல்லிய கிளையில் இருந்து மலர்கள் உதிர, அங்ஙனம் உதிரும் இடத்திலே, யானை ஆர் துயில் இயம்பும் நாடன் - யானையானது பெறுதற்கரிய துயில் செய்வதனால் உயிர்ப்பின் ஒலி உண்டாகும் நாட்டை உடைய தலைவனது, மார்பு உரித்தாகிய மறு இல் நட்பு - மார்பை உரியதாகப் பெற்ற குற்றமற்ற