கபிலர். (பி-ம்.) 1. ‘றிரையது’; 2. ‘மயக்கிய’; 3. ‘கழித்துழவும்’, ‘பானாணீத்தோர்’;4. ‘பெயருமென்ப’; 5. ‘மன்ன’; 8. ‘கற்பாலோரே’.
(ப-ரை.) தோழி -, பெரு கடல் கரையது - பெரிய கடற்கரையின்கண் உள்ளதாகிய, சிறு வெள் காக்கை - சிறிய வெண்மையை உடைய காக்கை, களிறு செவி அன்ன - களிற்றினது காதைப் போன்ற, பசு அடை மயக்கி - பசிய இலையைக் கலக்கி, பனி கழி - குளிர்ச்சியை உடைய கழி நீரை, துழவும் - இரையின் பொருட்டுத் துழாவுகின்ற, பால் நாள் - பாதி இரவில், தனித்து ஓர் தேர் வந்து பெயர்ந்ததுஎன்ப - தனியாக ஒருதேர் இங்கே வந்து மீண்டு சென்றதென்று அயலார் கூறுவர்; அதற்கொண்டு - அது தொடங்கி, அன்னை - தாய், அலைக்கும் - என்னைத் துன்புறுத்துகின்றாள்; பின்னு விடு கதுப்பின்- பின்னல் நாலவிடப்பட்ட கூந்தலை உடைய, மின் இழை மகளிர் - மின்னுகின்ற ஆபரணத்தை அணிந்த மகளிருள், இளையரும் மடவரும் -