சுயம்பிரபை | : | 'இயற்கையில் மிக்க ஒளியை உடையவள்' மேரு சாவர்ணியின் மகன். பில நகரில் வானர வீரர்கள் கண்ட தவமாது. வானரர்கள் வரவால் சாபம் நீங்கப் பெற்றுத் துறக்கம் புக்கவள். |
சுரசை | : | தக்கன் மகள். காசிபன் மனைவி. தேவர் வேண்ட அனுமனின் பலத்தை அறிய அரக்கியாகிச் சோதித்தவள். |
சுருதகீர்த்தி | : | சத்துருக்கனனின் மனைவி. |
சுரோசனன் | : | சலபோசனின் மகன். தசரதன் அம்பால் உயிர் மாண்டவன். |
சுவாயம்புவமனு | : | பிரமனின் மகன். |
சுனச்சேபன் | : | இரிசிகனின் நடுமகன், அம்பரீடன் செய்த நரமேத யாகத்திற்காகக் கொடுக்கப்பட்டு, கவுசிக முனிவரிடம் பெற்ற இரு மந்திரங்களால், யாகமும் முடிய உயிர் தப்பியவன். |
சூர்ப்பணகை | : | பிரமனின் மகனாகிய புலத்திய முனிவரின் மகனாகிய விசிரவசுக்கும் இரண்டாம் மனைவி கேகசிக்கும் பிறந்தவள். கணவன்-வித்யுக்சிருவன். தமையன் - இராவணன். |
சூரியன் பகைஞன் | : | சூரியன் சத்துரு. இராவணன் மந்திரத்தொருவன். |
சூளி | : | முனிவர். |
சோமதை | : | தேவமகள். |
தக்கன் | : | பிரமனின் மகன். சிவபிரானை மதியாது யாகம் செய்தமையால் சிவபிரானால் அழிக்கப் பெற்றவன். |
தண்டகன் | : | சூரியகுல வேந்தன். இட்சுவாகுவின் நூறு மக்களில் கடைப்பட்ட மூடன் என்பதால் 'தண்டன்' எனப் பெயரிடப்பெற்றவன். |
ததிமுகன் | : | மதுவனம் காக்கும் காவலர் தலைவன். |
தம்பன் | : | தம்பம் போன்ற வானரன். |
தயரதன் | : | அயோத்தி வேந்தன். இராமன் தந்தை. |
தரீமுகன் | : | குகை போன்ற முகத்தை உடைய வானரன். |