துருவாசர்
| : | தன்னை மதியாத இந்திரன் திருவைக் கடலில் மறைத்தவர். |
துன்முகன் | : | இராவணனுக்கு ஆலோசனை கூறும் படைத் தலைவன். பகைவர்க்குப் பயங்கரமான முகத்தை உடையவன். அனுமானால் அழிந்தவன். |
தூடணன் | : | யாவரையும் நிந்திப்பவன். இராவணன் தந்தை விசுரவசு முனிவர்க்கும், தாய் கேகசியின் தங்கை கும்பீநசிக்கும் பிறந்தவன். |
தூமநாட்டத்தன் | : | தூமிராட்சன். புகை போன்ற கண்களை உடையவன். இந்திரசித்தின் தேர்ச்சக்கரக் காவலாக சென்று போரில், தப்பிவந்து மீண்டும் போர்க்களம் சென்று மாண்டவன். |
தூமிரன் | : | கரடித் தலைவன். சாம்பவானுக்கு உடன்பிறப்பு. |
தேவராந்தகன் | : | தேவர்களுக்கு யமன் போன்றவன். இராவணன் மைந்தன் அனுமனால் அழிந்தவன். |
நந்தி | : | குரங்குகளால் அழிவு என இராவணனைச் சபித்தவன். |
நராந்தகன் | : | இராவணன் மைந்தருள் ஒருவன், பகைவர்க்கு யமன் போன்றவன். |
நளன் | : | விசுவகர்மாவின் மகன். சந்திரன் அமிசமானவன். சேது அணை கட்டியவன். |
நாரதர் | : | இசையில் வல்ல முனிவர். |
நிகும்பன் | : | கும்பகர்ணனின் மகன். |
நீலமாலை | : | சீதையின் தோழி. வில் முறித்த செய்தியைச் சீதைக்கு முதலில் அறிவித்தவள். |
நீலன் | : | அக்கினியின் மைந்தன். நீல நிறமுடையவன். வானரப் படைக்கெல்லாம் தலைவன். |
ப்ரகஸன் | : | பஞ்சசேனாபதிகளுள் ஒருவன். |
பகீரதன் | : | அம்சுமானின் மகன். கங்கையை உலகிற்குகக் கொணர்ந்தவன். |
பதுமுகன் | : | வானரப் படைத்தலைவன். |
பரத்துவாசர் | : | காட்டில் இராம இலக்குவரை உபசரித்த முனிவர். |
பரதன் | : | தசரதன், கைகேயி புதல்வன். |