ஆதலின், மன்று தொழுத பதஞ்சலி வேறு, யோக சூத்திரம் செய்த பதஞ்சலி வேறு, மாபாடியம் இயற்றிய பதஞ்சலி வேறு எனக் கண்டாம். (ஈ) திருமூலரும் மன்று தொழுதது நந்தியெம்பெருமான் மாணாக்கரில் பதஞ்சலியும், வியாக்கிரமரும் கயிலையினின்றும் தென்னாடுபோந்து தில்லையம்பலத்தில் எம்பெருமானுடைய நடன தரிசனம் காண்பான் வதிந்து வந்த காலத்து, திருமூலநாயனாரும் தம்முடைய சொந்த உடம்புடன் (அஃதாவது மூலனுடைய சரீரத்தில் புகுவதற்கு முந்தி) அவர்களுடன் கூடவே வந்து, நடன தரிசனத்தைக் கண்டு களித்துப் பின் கயிலைக்கு ஏகி, அங்குத் தவத்தினில் இருந்தார் என்பதை, "செப்பும் சிவாகமம் என்னுமப் போர்பெற்று அப்படி நல்கும் அருணந்தி தாள்பெற்றுத் தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின் ஒப்பில் எழுகோடி யுகமிருந் தேனே." "இருந்தேனிக் காயத்தில் எண்ணிலி கோடி இருந்தேன் இராப்பகல் அற்ற விடத்தே இருந்தேன் இமயவர் ஏத்தும் பதத்தே இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே." என்ற தமிழ் மூவாயிரச் செய்யுட்களால் அறியலாம். "இமயவர் ஏத்தும் பதத்தே" என்றதாலும், "என் நந்தி இணையடிக் கீழே" என்றதாலும். நாயனார் தில்லைக் கூத்தைக் கண்டு களித்தபின் கயிலை சென்று தவம் இயற்றினார் என்று போதருகின்றது. (உ) திருமூலர் என்னும் நாமம் ஏற்பட்ட காரணம் திருமூலர் பதஞ்சலி வியாக்கிரமருடன் தென்னாடு போந்தது முதல் தடவையாகும். அப்போது அவருக்குத் திருமூலர் என்ற நாமம் கிடையாது. இரண்டாம் தடவை அவர் கயிலையினின்றும் பொதியையை நோக்கி வரும்போது, சோழநாட்டுச் சாத்தனூரில் கோகுலம் மேய்க்கும் மூலம் இறந்து கிடக்கக் கண்டு, தம் உடலை ஓர் அரசமரப் பொந்தில் சேமித்து வைத்துவிட்டு, தம் உயிரை மூலன் குரம்பையுள் புகுத்தி மூலனாக எழுந்த பின்னர் அப் பெயர் ஏற்பட்டது ஆகும். அவர் மூலன் குரம்பையுள் புகுந்த பின்னர் செய்த நூல் "தமிழ் மூவாயிரம்" என்ற ஒரு நூலேயாகும். மூலன் குரம்பையுள் புகுமுன்னர்,
|