பக்கம் எண் :

1328
 

உபமன்னியு பிறந்தது வடநாட்டில் வசிட்டருடைய ஆசிரமத்தில் என்று புராணம் கூறும். பிறந்தது முதல் காமதேனுவினுடைய பாலைக் குடித்து உபமன்னியு வளர்ந்தார். தென்னாட்டில் தம்பிதாவின் ஆசிரமத்துக்கு வந்த பிற்பாடு, பாலுக்ககாக உபமன்னியு அழ, வியாக்கிரமர் நடராஜப் பொருமானை வேண்ட, கூத்தப்பெருமான் அருள் சுரந்து பாற்கடலையே வரவழைத்துக் கொடுத்தார் என்று கோயிற் புராணத்தில் உமாபதி சிவம் கூறுகின்றார். அப் பாடல்களாவன :

"நற்பான் மிகுதந் தையரும் புதல்வர்
நஞ்சந் ததியுய்ந் திடநண் ணினையேல்
இற்பா லினியா குதியா திமறித்
திடுவா னுடையான் நெடுவா னடைவான்
முற்பா லுனையா னெனநீ பெறுமா
முனியா துகொளென் றுவசிட் டமுனிக்
கற்பார் தருபின் னியைமன் னுமணக்
கடனால் உடனா நெறிகண் டனனே"

"பின்பக் கொடிமன் னுபமன் னியனைப்
பெறவந் தவருந் ததிகொண் டுபெயர்ந்து
இன்பச் சுரபிப் பொழிபா னுகர்வித்
தெழிலா ரவளர்த் திடுநா ளிவர்தாம்
அன்பிற் புணரக் கொணர்வித் துமகிழ்ந்து
அயலென் றிடுமுன் பயிலும் படிசேர்
புன்பற் கமர்பண் டமுமுன் பறிபால்
போலுய்த் தனவும் புகழா திகழ்வான்."

"மணமே தருபால் பெறுமா றழமா
மகனார் முனியாம் அறியோம் அறியோம்
உணவே இனிதாம் அவைதாம் இவர்கா
ணுடையா ரெனவாழ் விடையா னெதிரே
துணர்மே லெழுவெங் கனல்தங் கிநடுத்
துஞ்சும் தொழிறஞ் செனநைஞ் சழுதக்
கணமே இறையான் இறைபால் அலையுங்
கடல்பெற் றதுகண் டுகளித் திடுவான்."

-கோயிற் புராணம்.

ஆதலின், வசிட்டர், உபமன்னியு, பதஞ்சலி, வியாக்கிரமர், திருமூலர், முதலியோர் சமகாலத்தவர் என்க.

தசரத இராமருடைய காலம் 6000 B. C. என்றும், அவர் பாண்டி நாட்டுத் தலைநகராகிய கபாடபுரம் சென்ற காலத்து, அப்போது முடிதாங்கி அரசாண்ட அனந்தகுண பாண்டியன், அவரை உபசரித்ததாகவும் பாண்டிய வமிசாவளியும் சரித்திரமும் பேசுகின்றன.