பக்கம் எண் :

1330
 

புலவர்கள் எல்லாம் பெயர் ஒற்றுமை ஒன்றையே கருதி, எல்லா அகத்தியர்களையும் ஒன்றுபடுத்தி ஒருவர் சரிதத்தை இன்னொருவர் சரிதத்தில் புகுத்திப் புராணங்களில் எழுதிவிட்டார்கள்.

மேலே கூறிய எல்லா அகத்தியர்களும், காலத்தாலும் - இடத்தாலும் - உணவாலும் - நடையுடை பாவனைகளாலும் - பழக்க வழக்கங்களாலும் முற்றிலும் மாறுபட்டவர்கள் ஆவார்கள்.

குடகுமலையில் வாழ்ந்துவந்த அகத்தியரைக் குடகுமுனி என்பர். அவரைக் குடமுனி என்றும் சுருக்கம் நோக்கி அழைப்பர். பிற்பாலப் புலவர்கள் சரித்திரம் தெரியாததால் வார்த்தையைக் கொண்டு குடமுனி குடத்தில் பிறந்தார் என்று கதை கட்டிவிட்டார்கள்.

அது மாதிரியே, பொதியமலைக்குக் குற்றாலம் என்று ஒரு பேர் இருப்பதால் பொதியமலை அகத்தியரைக் குற்றாலமுனி என்பர். சுருக்கமாகக் குறுமுனி என்பதும் உண்டு. குறுமுனி என்றாலும் குற்றாலமுனி என்றாலும் பொதியமலை முனி என்றாலும் ஒன்றே. பிற்காலப் புலவர்கள் சரித்திரம் தெரியாமையால் குறுமுனி என்றால் குறுகிய முனி என்றும் அவர் பெருவிரல் அளவு உள்ளவர் என்றும் கதை எழுதிவிட்டார்கள்.

மேலும், இராமாயண காலத்தில் பஞ்சவடியில் ஆரிய அரசராகிய தசரதருக்குத் தூதராக (Ambassador) இருந்த பஞ்சவடி அகத்தியரையும், பொதியமலையில் இமயவரம்பன் மகள் பார்வதியைக் கலியாணம் செய்த மேருவரம்பன் என்கிற பரமேச்சுரர் காலத்தில் இருந்த பொதியமலை அகத்தியரையும் ஒன்றுபடுத்திக் கூறுவாரும் உளர்.

அகத்தியர் என்ற பெயரை உடைய பல அகத்தியர்களைப் பற்றி "அகத்தியர் விளக்கம்" என்னும் நூலில் பரக்கக் காட்டியிருக்கின்றேன். ஆண்டுக் கண்டு கொள்க:

ஆதலின், அகத்தியர் என்னும் நாமம் உடையவர் பலர் என்பதூஉம், திருமூலர் தம் நூலில் கூறிய அகத்தியர் பொதியமலை அகத்தியர் என்பதூஉம்; அப் பொதியமலை அகத்தியரைப் பார்க்க வேண்டியே கயிலையினின்றும் அவர் இரண்டாம் தடவை தென்னாடு போந்தார் என்பதூஉம் அறிந்தாம்.

(ஏ) திருமூலர் காலத்தைக் குறித்த உட்சான்றுகள்

இனி, இன்னொருவிதமாகத் திருமூலர் காலத்தை ஆராய்வாம். சிந்துநதிப் பிரதேசத்தில் உள்ள அரப்பா - மொகஞ்சதாரோ என்னும்