இராவணனுடைய சேனைமொழி (Military Language) தெலுங்கு அம்மொழியை உண்டு செய்தவன் இராவணன். தமிழ் வட்டெழுத்துக்களையே சிறிது மாற்றி அம்மொழிக்கு நெடுங்கணக்கு ஏற்பாடு செய்தார்கள். ஆதலின், தெலுங்கிலும் 16 உயிர்களும், 35 மெய்களுமாக 51 எழுத்துக்கள் உண்டு. நம் திருமூலர் வட்டெழுத்துக் காலத்தவர் ஆனபடியால் தம்முடைய நூலில் தமிழ்மொழியிலுள்ள 16 உயிர்களைப் பற்றியும் 35 மெய்களைப்பற்றியும் கூறியுள்ளார். அப் பாடல்கள் வருமாறு : "ஓதும் எழுத்தோடு உயிர்க்கலை மூவைந்து ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர் சோதி எழுத்தின் நிலைஇரு மூன்றுள நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே." 942 "விந்துவி லும்சுழி நாதம் எழுந்திட பந்தத் தலைவி பதினாறு கலையதாக் சுந்தர வாகரம் காலுடம் பாயினாள் அந்தமு மின்றியே ஐம்பத்தொன் றாயதே." 943 "ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும் ஐம்ப தெழுத்தே அனைத்துஆ கமங்களும் ஐம்ப தெழுத்தேயும் ஆவது அறிந்தபின் ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே." 944 ஆதலின், திருமூலர் வட்டெழுத்துக் காலத்தவர் என்று கூறுவதில் தடை ஒன்றுமில்லை. அவர் சதுர எழுத்துக் காலத்தவரானால் 12 உயிர்களையும் 18 மெய்களையுமே பற்றிப் பாடியிருப்பார். திருமூலர் கூறியது ஆரிய மொழியின் திரிபாகிய சமஸ்கிருதத்தின் எழுத்துக்களையே ஒழிய தமிழ்எழுத்துக்களை அல்ல என்பாரும் உண்டு. அவர்கள் எல்லாரும் கூர்ந்து ஆராய வேண்டியது ஒன்று உண்டு. அஃதாவது, "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே." என்று கூறியிருக்கும் அடிகளை நோக்குக. இறைவன் அருளால் தமிழ் மூவாயிரம் செய்தவர் வேறு மொழியின் எழுத்துக்களைக் கூற நியாயம் இல்லை.
|