பக்கம் எண் :

1337
 

அப்படி இருந்தும், சிவப்பு இந்திய (Red Indian) வம்சத்தனாகிய இராவணனைத் தமிழ் நாட்டினின்றும் தொலைக்க, தமிழ் அரசர்கள்எல்லாம் ஒன்று சேர்ந்து, ஆரிய அரசனாகிய தசரத இராமனையும் உதவிக்குச் சேர்த்துக்கொண்டு, போரிட்டு, வெற்றி அடைந்தார்கள், அன்று தொட்டு ஆரிய நாகரிகம் விந்திய மலைக்குத் தெற்கே தமிழ்நாட்டில் பரவத் தொடங்கயிது. சூத்திரங்களில் விதித்ததற்கு மாறாக ஒரு தடவை எண்ணாயிரம் பேரும் (அஷ்ட சகஸ்ரம் என்ற பிராமண வகுப்பார்), இன்னொரு தடவை ஆறாயிரம் பேரும் (ஆறு வேலு என்ற தெலுங்கநாட்டுப் பிராமண வகுப்பார்), இவர்களுக்கெல்லாம் முன்னாடி வந்தவரும் (பிரகச்சரணர் என்ற பிராமண வகுப்பார்) கும்பல் கும்பலாகத் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள்1. ஆரிய மொழிச் சொற்கள் தமிழில் கலக்க ஆரம்பித்தன. ஆரியமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதுதான் சிறந்த நாகரிகமானது என்று பல தமிழர் எண்ணினார்கள்.

ஆதலின் அந்தக் காலத்தில் வாழ்ந்த நம் திருமூலரும் ஆரிய மொழிச் சொற்களைத் தம் நூலின்கண் வழங்குவர் ஆயினர்.

இதுகாறுங் கூறியவாற்றால், நம் திருமூலர் இராமாயண காலத்தவர் என்றும், அஃது இற்றைக்கு ஏறக்குறைய 8000 வருடங்கள் முன்னர் என்றும், சனகர் - சனந்தனர் - சனாதனர் சனற்குமாரர் - சிவயோக மாமுனி - மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர் - உபமன்னியு - வசிட்டர் - பஞ்சவடி அகத்தியர் கவுசிகர் - கவுதமர் - சதானந்தர் - தசரத இராமர் - வாலி சுக்ரீவர் - இராவணன் - அனந்தகுண பாண்டியன் முதலியோர் திருமூலருக்குச் சம காலத்தவர் என்றும் அறிகின்றாம்.

நம் திருமூலர் சுந்தரநாதன் என்னும் பெயருடன் முதல் தடவை தென்னாட்டுக்கு வந்து தில்லையில் தப்பிலா மன்றில் பதஞ்சலி, வியாக்கிரமர்களுடன் தனிக் கூத்துக் கண்டது 8000 வருடங்கள் முன்னர் ஆகும்.

அதன்பின் அவர் திருக்கயிலைக்குச் சென்று 3000 ஆண்டுகள் தவம் இயற்றினார். பின் 3100 B. C. யில், அஃதாவது 5041 ஆண்டுகள் முன்னர், அஃதாவது பாரதச் சண்டை முடிவில் அவர் பொதியமலை அகத்தியரைப் பார்க்க விரும்பிக் கயிலையினின்றும் புறப்பட்டார். திருமூலருக்கு இஃது இரண்டாவது தென்னாட்டு யாத்திரை ஆகும்.
"கயிலாயத் தொருசித்தர் பொதியிற் சேர்வார்"

என்ற உமாபதி சிவத்தின் வாக்கை நோக்குக.


1. தில்லை மூவாயிரவரும், திருநாங்கூர் நாலாயிரவரும், திருவெண்காடு இரண்டாயிரவரும் மேலே கூறிய ஆரியக் கும்பல்களே.