பக்கம் எண் :

1338
 

நம் திருமூலர் கயிலாயத்தினின்றும் புறப்பட்டு வரும் வழியில் மகாநதிக் கரையில் பூரி (ஜெகன்னாதம்) சமீபம், துவரைக் கோமான் கண்ணன் ஒரு வேடனால் கொல்லப்பட்டார். கொன்றவுடன் அவ் வேடன் அக் கண்ணன் சரீரத்தைச் சிதையில் வைத்துக் கொளுத்திவிட்டுப் போய்விட, உடனே பெருமழை பொழிய, கருகிய கைகால்களையுடைய கண்ணன் சரீரமானது வெள்ளத்தால் அடித்துக்கொண்டு போகப்பட்டுப் பூரிக்குப் பக்கத்தில் ஒதுக்கிவிடப்பட்டது. அவ்வூரார் அதனைக் கண்டு துவரைக்கோமான் கண்ணன் சரீரமென்று கருதி, எடுத்து, அதனை அடக்கம் செய்து கோயில் அமைத்தார்கள். அதுவே இப்போது ஜெகன்னாதம். இதனைத் திருமூலர் நேரே கண்டவர் ஆனதால்,

"இருக்குரு வாகிய எழில்வேதத்தி னுள்ளே
உருக்குணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குரு வாகிய வேதியர் சொல்லும்
கருக்குரு வாகிய கண்ணனு மாமே."

என்று தம் தமிழ் மூவாயிரத்தில் பாடியுள்ளார். ஆதலின், இரண்டாம் தடவை திருமூலர் தென்னாடு போந்தது கி. மு. 3100- இல் ஆகும்.

இவர் பொதியையை நோக்கி வரும் வழியில் சாத்தனூரில், திருவருளியக்க, தம் உடலை, ஓர் இடத்தில் சேமித்து வைத்து விட்டு, இறந்து கிடந்த கோக்குல மேய்க்கும் மூலன் குரம்பையுள் புக்கு, ஆக்களின் துயர் நீக்கிப் பின் தம் உடலை வைத்த இடத்தில் வந்து பார்க்க அவ் வுடல் மறைக்கப்பட்டதைத் திருமூலர் உணர்ந்தார். இதனை,

"அகலிடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்தெம் மெய்யைப் போகவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேயிரு ணீங்கிநின் றேனே." (141)

என்று தமிழ் மூவாயிரத்தில் விளக்கியுள்ளார்.

பிறகு, மூலன் சரீரத்தோடு 'திருமூலர்' என்ற பெயருடன் திருவாவடுதுறையை அடைந்து, அங்கே கோயிலின் வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் இருந்த ஓர் அரசமரத்தடியில் 3000 ஆண்டுகள் யோகத்தில் இருந்து ஆண்டுக்கு ஒரு பாவாகத் "தமிழ் மூவாயிரத்தை"ப் பாடியருளி, கி. மு. 100- இல் பரமுத்தி அடைந்தார்.

அவர் திருவாவடுதுறை அரசமரத்து நீழலில் இருந்தார் என்பதை,