பக்கம் எண் :

1339
 

"சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனை 
சேர்ந்திருந் தேன்சிவ னாவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவ நாமங்கள் ஓதியே."

"ஞானத் தலைவிதன் னந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்
ஞானப்பா லூட்டியென் னாதனை யர்ச்சித்து
நானு மிருந்தேன்நற் போதியின் கீழே."

என்ற தமிழ் மூவாயிரச் செய்யுள்களால் அறியலாம்.

தாம் பரமுத்தி அடைவதன் முன்னம் "தமிழ் மூவாயிரத்தைத்" தம்முடைய ஏழு சீடர்களுக்குப் புகட்டி, உலகில் பல மடங்களை ஏற்பாடு செய்து பதி, பசு, பாச இலக்கணங்களைப் புகட்டும்படி செய்து, தமிழ் மூவாயிரப்பாக்கள் வரையப்பட்ட ஒரு சுவடியைத் திருவாவடுதுறைத் திருக்கேயிலின் முன்னர் இருக்கும் பலிபீடத்தின்கீழ்ச் சேமித்து வைத்து விட்டுப் பின் தாம் பரமுத்தி எய்தினார்.

திருமூலருக்கு ஏழு சீடர்கள் உண்டு என்பதும், அவர் ஏழு மடங்களைத் தாபித்தார் என்பதும்,

"மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி யாமே."

"வந்த மடமேழு மன்னும்சன் மார்க்கம்
முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை."

என்ற தமிழ் மூவாயிரச் செய்யுட்களால் அறியலாம்.

திருமூலர் திருவாவடுதுரைத் திருக்கோயிலின் முன்னர் உள்ள பலிபீடத்தின் கீழ் வைத்திருந்த தமிழ் மூவாயிரம் வரையப்பட்ட சுவடியைத்தான், கி. பி. 634 முதல் கி. பி. 650 வரை வாழ்ந்த திருஞான சம்பந்தர் எடுத்தார் என்று தேவாரப் பதிப்பாளர்கள் வரைந்துள்ளார்கள். இச் செய்தி பெரிய புராணத்தில் இல்லை தேவாரப் பதிப்பாளர்களுக்கு ஆதாரம் எதுவோ தெரியவில்லை. ஒருவேளை கர்ணபரம்பரைச் செய்தியாய் இருக்கலாம்.

(ஐ) திருமூலர் கி. மு. 6000 முதல் கி. மு. 100 வரை
வாழ்ந்தவர் என்பது

திருமூல நாயனார் கி. மு. 6000 முதல் கி. மு. 100 வரை 5900 ஆண்டுகள் உயிரோடு இருக்கமுடியுமா என்று சந்தேகப்படுகிறவர்களுக்கு,