அவர் எத்தனை ஆண்டுகளேனும் உயிரோடிருக்கும் வன்மை வாய்ந்தவர். இவர் மாத்திரமன்று; இவர் குழாஅத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் பொதியமலை அகத்தியரும் இத்தகைய வன்மை வாய்ந்தவர்களே. இவ்வாறு சித்தி பெற்றவர்களே சித்தர்கள். இவர்கள் கண்ட இந்த முடிவே சித்தாந்தம். ஆதலின் திருமூலர், கி. மு. 6000 முதல் கி. மு. 100 வரை, 5900 ஆண்டுகள் திருவாவடுதுறையில் நற்போதியின்கீழ் இருந்தார் என்பதில் யாதும் ஐயுறவு இல்லை. (ஒ) திருவள்ளுவர் (கி. மு. 75 to 36 கி. பி.), திருமூலரின் கருத்துக்களையும், சொற்களையும், தொடர்களையும் பொன்னே போல் போற்றியுள்ளார் என்பது பாண்டிய நாட்டில் கி. மு. 50 முதல் கி. பி. 30 வரை அரசாண்ட கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி காலத்தில் உள்மந்திரத் தலைவராய் இருந்து. "வள்ளுவர்" என்னும் பட்டம் பெற்று, வழுதியின் வேண்டுகோட்கிணங்கித் திருக்குறள் என்னும் நீதிநூலைப் பாடியவர் "வாளார் நெடுமாறன் வள்ளுவனார்" ஆவார். "தப்பா முதற்பாவால் தாமாண்ட பாடலினால் முப்பாலின் நாற்பால் மொழிந்தவர் - எப்பாலும் வைவைத்த கூர்வேல் வழுதி மனமகிழத் தெய்வத் திருவள் ளுவர்." என்ற கீரந்தையார் பாடலினால் வழுதியின் கட்டளைப்படி வழுதிடனமகிழத் தெய்வத் திருவள்ளுவர் திருக்குறளைப் பாடினார் என்பது பெற்றாம். "அறனறிந்தேம் ஆன்ற பொருள்தெரிந்தேம் இன்பின் திறனறிந்தேம் வீடு தெளிந்தேம் - மறன்எறிந்த வாளார் நெடுமாறன் வள்ளுவனார் தம்வாயால் கேளா தனவெல்லாங் கேட்டு." என்ற கொடிஞாழல் மாணிபூதனார் பாட்டால் திருவள்ளளுவருடைய இயற்பெயர் "நெடுமாறன் வள்ளுவர்" என்பது பெற்றாம். திருவள்ளுவர் தம் இளவயதில் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலையும், 'தமிழ் மூவாயிரம்' என்னும் தத்தவ நூலையும் நன்கு கற்றவர். அரசியல் ஞானமும் உலக அறிவும் மிகுதியும் உடையவர் வாட் படையைத் தாங்கிச் சண்டை செய்வதில் இணையற்றவர். இவர் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதியுடனும் தனித்தும் பல தடவைகளில் பகைவர்களுடன்
|