இடங்கழி நாயனார் | 1157. | சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு கொங்கிற் கனக மணிந்தவா தித்தன் குலமுதலோன் திங்கட் சடையர் தமரதென் செல்வ மெனப்பறைபோக்(கு) எங்கட் கிறைவ னிருக்குவே ளூர்மன் இடங்கழியே. | | 65 |
செருத்துணை நாயனார் | 1158. | கழிநீள் கடல்நஞ் சயின்றார்க் கிருந்த கடிமலரை மொழிநீள் புகழ்க்கழற் சிங்கன்தன் தேவிமுன் மோத்தலுமே எழில்நீள் குமிழ்மலர் மூக்கரிந் தானென் றியம்புவரால் செழுநீர் மருகல்நன் னாட்டமர் தஞ்சைச் செருத்துணையே. | | 64 |
புகழ்த்துணை நாயனார் | 1159. | செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை வையம் சிறுவிலைத்தா வுருவலி கெட்டுண வின்றி யுமைகோனை மஞ்சனஞ்செய் |
1157 குறிப்புரை: சிங்கத்து உருவன் - இரணியாசுரனை அழித்தற் பொருட்டுக் கொண்ட நரசிங்கமாகிய உருவத்தை உடையவன். செற்றவன் - (சரபமாய்த் தோன்றி) அழித்தவன்; சிவபெருமான். கொங்கிற் கனகம் - கொங்கு நாட்டினை வென்று கொணர்ந்த பொன். ஆதித்தன் - முதல் ஆதித்த சோழன். 'இவன் குலத்து முன்னோராய் இருந்தவர் இந் நாயனார்' என்பதாம். சிற்றம்பலம் பொன் வேய்ந்தமை பற்றி ஆதித்த சோழன் புகழ்ச்சி மிக்கவனாய் இருந்தமையின், 'அத்தகையோன் இந்நாயனார் வழியில் வந்தவனே' என்பது உணர்த்து முகத்தால் இந் நாயனாரது பெருமையைப் புலப்படுத்தினார்' இஃதே பற்றி இந்நூலாசிரியரை அவ் ஆதித்த சோழன் காலத்தவராகக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. பறை போக்குதல் - பறை சாற்றுவித்தல். 'பறை போக்கு இறைவன்' என இயையும் "இவரது ஊர் இருக்குவேளூர்" எனப்பட்டபோதிலும், "ஆதித்தன் குல முதலோன்" எனப்பட்டமையால், சேக்கிழார் புராணம் இவரை "முடி மன்னர்" - எனக் கூறிற்று. 1158. குறிப்புரை: இப்பாட்டின் பொருளை மேல் கழற்சிங்க நாயனாரைப் பற்றிப் போந்த, "மாதவத்தோர் தங்கள்" என்னும் பாட்டின் பொருள் பற்றி அறிக. குமிழ் மலர் மூக்கு - குமிழம்பூப் போன்ற மூக்கு. 1159. குறிப்புரை: செருவிலிபுத்தூர் அரிசில் ஆற்றங் கரையில் இருத்தலால் 'அரிசிற்கரைப் புத்தூர்' - எனப்பட்டது. தேவாரம்
|