| தருவதோர் போதுகை சோர்ந்து கலசம் விழத்தரியாப் பெருவரை வில்லி யருளும் நிதியது பெற்றனனே. | | 67 |
கோட்புலி நாயனார் | 1160. | பெற்ற முயர்த்தோன் விரையாக் கலிபிழைத் தோர்தனது சுற்ற மறுக்குந் தொழில்திரு நாட்டியத் தான்குடிக்கோன் குற்ற மறுக்கும்நங் கோட்புலி நாவற் குரிசிலருள் பெற்ற வருட்கட் லென்றுல கேத்தும் பெருந்தகையே. | | 68 |
சுந்தரமூர்த்தி நாயனார் | 1161. | தகுமகட் பேசினோன் வீயவே நூல்போன சங்கிலிபால் புகுமணக் காதலி னாலொற்றி யூருறை புண்ணியன்தன் மிகுமலர்ப் பாதம் பணிந்தரு ளாலிவ் வியனுலகம் நகும்வழக் கேநன்மை யாப்புணர்ந் தான்நாவ லூரரசே. | | 69 |
பெற்ற தலம். சிறுவிலை - பஞ்சம். வையம் சிறு விலையை உடையதாய்விட. உரு - உடம்பு. வலி கெட்டது உணவின்மையால் ஆகலின், 'உணவின்றி உரு வலி கெட்டு' என மாற்றியுரைக்க. "செய்தருவது" என்பதில், 'தரு' துணைவினை. 'தரியாது நடுங்கி' என ஒரு சொல் வருவிக்க. நிதி, படிக்காசு. இவ் வரலாற்றை இத்தலச் சுந்தரர் தேவாரத் திருப்பதிகத்து 6-ஆம் திருப்பாட்டால் அறிக. 1160. குறிப்புரை: விரையாக் கலி - ஒருவராலும் கடக்கலாகாத ஆணை. இது சிவபெருமான் மேல் இடப்படும் ஆணைக்கே பெயராய் வழங்கும். "தனது" என்பதில் 'தன்' சாரியை. 'தமது' என்பது பாடமன்று. 'பிழைத்தோராகிய தனது சுற்றம்' என்க. பிழைத்தோர் - கடந்தோர். சுற்றத்தாரை, "சுற்றம்" என்றது உபசார வழக்கு. திருநாட்டியத்தான்குடி, ஊர்ப்பெயர். குற்றம் அறுக்கும் - ஏனையோரது குற்றங்களையும் நீக்கவல்ல. நாவல் - நாவலூர். குரிசில் - தலைவன். நாவலூர்த் தலைவன் சுந்தரமூர்த்தி நாயனார். அவரது அருளாவது, "கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி"1 எனப் புகழ்ந்தருளிய புகழ்த்தொடர். 1161. குறிப்புரை: "நூல்போன" என்றது சிலேடை நயம். 'மங்கல நாணை இழந்த என்பது மேற்போக்குப் பொருள். ஒருவன் மகட் பேசியதன்றி, பேசப்பட்ட மகளோ, அவள் தன் இருமுது குரவரோ மணத்திற்கு இசையாத நிலைமையில் மகட் பேசினோன் இறந்தமை பற்றி அவனால் பேசப்பட்ட மகளை, 'மங்கல நாணை இழந்தவள்' என எவரும் கூற ஒருப்படார் ஆதலின் "நூல் போன" என்றது
1. திருமுறை - 7.15.10
|