பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை814

பத்தராய்ப் பணிவார்கள்

1162.அரசினை யாரூ ரமரர் பிரானை அடிபணிந்திட்
டுரைசெய்து வாய்தடு மாறி யுரோம புளகம்வந்து
கரசர ணாதி யவயவங் கம்பித்துக் கண்ணருவி
சொரிதரு மங்கத்தி னோர்பத்த ரென்று தொகுத்தவரே.

70


சிலேடை நயமேயாம். "நூல்" என்பது விடாத ஆகுபெயராய் அதனைத் தரும் மண வினையைக் குறிக்க, மகட் பேசினோன் உடனே இறந்தமை கேட்டு அவளை மணம் பேச நினைவார் ஒருவரும் இல்லாது போயினர்' என்பதே அத்தொடரின் உட்பொருள். இனி உலகம் நகும் வழக்காவது, மகட் பேசினான் உடனே இறந்ததை அறிந்த பின்பும் அவ் இறப்பிற்கு ஏதுவாய் நின்ற மகளை மணக்க எவன் ஒருவன் விரும்பினும் 'அவன் விளக்கைப் பிடித்துக் கொண்டே கிணற்றில் வீழ்வான்போலும் அறிவிலி' என உலகம் இகழத் தொடங்கிய வழக்கு. உலகத்தில் அத்தன்மைத்தாகிய வழக்குச் சுந்தரர்பால் பொய்த்துப் போய் இன்பம் பயந்ததையே "உலகம் நகும் வழக்கே நன்மையாக" என்றார். இச்சிலேடை நயம் உணர மாட்டாதார் இந்நூலாசிரியர் "உலகம் 'இழுக்கு' எனக் கடிந்த பழியொழுக்கத்தையே சுந்தரர் 'நன்று' என மேற்கொண்டதாகக் கூறினார்" என்று இகழ்வர். இவரெல்லாம்,

மோகம் அறுத்தவர்க்கே முத்தி கொடுப்பமென
ஆகமங்கள் சொன்ன அவர்தம்மைத் - தோகையார்பால்
தூதாகப் போகவிடும் வன்றொண்டன்1

என்றதில், "விளங்கிழையார் இருவரோடு முயங்கிய போதிலும்2 வன்றொண்டர், தம் அறிவு மோக மயத்ததாகாது, சிவனை மறவாத சிந்தையால் சிவஞான மயமாகவே இருந்தார் - என்னும் உண்மை உணர்த்தப்பட்டமையை அறியாது, சிவன் வன்றொண்டர் பொருட்டுத் தான் வகுத்த நெறியினைத் தானே அழித்தானாகக் கூறி மகிழ்பவரோடு ஒரு பெற்றியர் ஆவர். இன்னோரைத் தெருட்டுதல் அரிது.

1162. குறிப்புரை: உடல் நிலத்திற்படிய வீழ்ந்து சிவபெருமானது திருவடிகளை வணங்குதல், அன்பினால் நாக்குழற அப்பெருமானது புகழ்தனை எடுத்தோதுதல், உடம்பெங்கும் மயிர்க்கூச் செறிதல், கை கால் முதலிய உறுப்புக்கள் யாவும் அன்பினால் நடுங்கல், கண்களினின்றும் அன்புக் கண்ணீர் அருவிபோல உடம்பெங்கும்


1. திருக்களிற்றுப்படியார் - 72.
2. நால்வர் நான்மணிமாலை.