பக்கம் எண் :

815திருத்தொண்டர் திருவந்தாதி

பரமனையே பாடுவார்

1163.தொகுத்த வடமொழி தென்மொழி யாதொன்று தோன்றியதே
மிகுத்த வியலிசை வல்ல வகையில்விண் தோயுநெற்றி
வகுத்த மதில்தில்லை யம்பலத் தான்மலர்ப் பாதங்கள்மேல்
உகுத்த மனத்தொடும் பாடவல் லோரென்ப ருத்தமரே.

71


ஒழுகப் பெறுதல் இவை முதலியவற்றை உடையோர் பத்தராய்ப் பணிவாராவார். கம்பித்தல் - நடுங்குதல். அங்கம் - உடம்பு. தொகுத்தவர் - தொகுக்கப்பட்டவர். எனவே, இவரைப் போல ஒருவராகச் சொல்லப்படாமல், பலராகச் சொல்லப்படுவார் 'தொகையடியார்கள்' என்பது போந்தது. போதவே, 'ஒவ்வொருவராகச் சொல்லப்பட்டோர் தனியடியாராவர்' என்பதும் பெறப்பட்டது. "சொரிதரும்" என்னும் பெயரெச்சம் "அங்கம்" என்னும் இடப்பெயர் கொண்டது.

1163. குறிப்புரை: "தொகுத்த" என்னும் பெயரெச்சம் "இயல், இசை" என்னும் செயப்படு பொருட் பெயர்களைக் கொண்டது. "வடமொழி தென்மொழி" என்பது உம்மைத் தொகை. அதன் ஈற்றில் ஏழன் உருபு விரிக்க. தோன்றியது - கைவந்தது. "வடமொழி தென்மொழிகளில் யாதொன்று தோன்றியது" எனக் கூறினமையால் நாயன்மார் நெறியில் மொழிவேற்றுமை கொள்ளப்படாமை விளங்கிற்று. இவற்றுடன், "தேசிகம்" எனச் சேக்கிழார் பிறமொழிகளையும் சேர்த்துக் கூறினார். "வடமொழியும், தென்தமிழும், மறைகள் நான்கும் - ஆனவன்காண்" எனவும், "ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்"1 எனவும் அப்பர் பெருமானும், "தமிழ்ச் சொலும் வடசொலும் தாள்நிழற் சேர"2 எனத் திருஞான சம்பந்தரும்,

ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே

தமிழ்ச்சொல் வடசொல் இரண்டும் அவனை
உணர்த்தும்3

எனத் திருமூலரும் அருளினமை காண்க. செய்யுள்கள் இயலிலும் உண்டு. அவை 'பா' எனவும் 'பாவினம்' எனவும் கூறப்படும். அவைகளிலும் ஓரளவு இசை உண்டு. "இயல், இசை" எனவே, இனம்


1. திருமுறை - 6.87.1, 23,5
2. திருமுறை - 1.77.4.
3. திருமந்திரம் - ஆகமச் சிறப்பு - 9.10.