பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை854

மொழிக்கே விரும்பி முளரிக் கலமரு மோவியர்தம்
கிழிக்கே தருமுரு வத்திவள் வாடிடக் கீள்கின்றதே.

53

1235.கீளரிக் குன்றத் தரவ முமிழ்ந்த கிளர்மணியின்
வாளரிக் கும்வைகை மாண்டன ரென்பர் வயற்புகலித்
தாளரிக் கும்அரி யானருள் பெற்ற பரசமய
கோளரிக் குந்நிக ராத்தமிழ் நாட்டுள்ள குண்டர்களே.

54

 

1234. குறிப்புரை: இப்பாட்டு, கைக்கிளைத் தலைவியது ஆற்றாமை கண்டு தோழி கங்குற் காலத்தில் பிறையைப் பழித்துக் கூறியது.

இப் பிறை - கொச்சைவயவர் - எனத் தானும், பிறரும் மொழிகின்ற மொழியையே விரும்பி, (அவர் சூடியுள்ள) தாமரை மாலையைப் பெறுதற்கு அலமருகின்ற இவள் வாடும்படி கதிர் விழுந்த பின்பு விளங்குகின்ற செவ்வானத்தைக் கீள்கின்றதே; (இது) இன்று பழிக்கே தகுகின்றது' - என இயைத்து முடிக்க. 'இயல்பாகவே மெலிகின்றவரை நலிதல் பெருங் கொடுமை' என்பதாம். தகுகின்றது - ஏற்புடைத்தாகின்றது. "பழிக்கே" என்னும் பிரிநிலை ஏகாரத்தால், 'புகழுக்குச் சிறிது தக்க தாயிற்றில்லை' என்பது பெறப்பட்டது. பல் கதிர் - பல கிரணங்களை யுடைய சூரியன். விழுந்த வழி - மறைந்த வழி. வழிக்கே - வழியின் கண்ணே; உருபு மயக்கம். செக்கர் - செவ்வானம். கொச்சைவயம் - சீகாழி. முளரி, இருமடி யாகுபெயர். 'அலமரும் இவள், உருவத்து இவள்' எனத் தனித் தனி முடிக்க. "கிழிக்கு" என்பதும் "வழிக்கு" என்பதுபோல உருபு மயக்கம். தரும் - 'எழுதிக் காட்டுகின்ற உருவம்' என்க. உருவத்து இவள் உருவத்தை உடைய இவள். 'வாட்டிட' என்பது பாடமாயின், 'இவளை' என்னும் இரண்டன் உருபு தொகுக்கப்பட்ட தாம். கீள்கின்றது - கிழிக்கின்றது; கிழித்துக் கொண்டு புறப்படா நின்றது. 'ஏனோ' என்பது சொல்லெச்சம். இது கேட்டுத் தலைவி, 'இஃது இயற்கை' என்னும் உணர்வால் ஆற்றுவாள் ஆவது பயன்.

1235. குறிப்புரை: 'பரசமய கோளரிக்கு (ச் சற்றும்) நிகராகாத குண்டர்கள் வைகைக் கரையில் மாண்டனர் என்பர்' - என இயைத்து முடிக்க. கீள் அரிக் குன்றம் - பிற விலங்குகளைக் கிழிக்கின்ற சிங்கங்களை யுடைய மலை. "கிளர் மணியின் வாள் அரிக்கும் வைகை" - என்பதை, 'கிளர் வாளின் மணி அரிக்கும் வைகை' - என மொழி மாற்றி யுரைக்க. வாள் - ஒளி. அரித்தல் - கொழித்தல். தாள் அரிக்கும் அரியான் - தனது திருவடிகள் திருமாலும் காண அரியன ஆயினவன்; சிவபெருமான். "தாள் அரியான்" எனச் சினைவினை முதல்மேல் நின்றது. 'நிகராக்