| 1246. | அண்ணல் மணிவளைத் தோளரு காசனி சண்பையன்ன பெண்ணி னமிர்தநல் லாள்குழல் நாற்றம் பெடையொடுபூஞ் கண்ணந் துதைந்தவண் டே!கண்ட துண்டுகொல்? தூங்கொலிநீர்த் தண்ணம் பொழிலெழிற் காசினி பூத்தமென் தாதுகளே. | | 65 | | 1247. | தாதுகல் தோய்த்தநஞ் சந்நாசி யார்சட லம்படுத்துத் தூதையிற் சிக்கங் கரஞ்சேர்த்து வாளா துலுக்குகின்றீர்; போதியிற் புத்தர்கள்! வம்மின்; புகலியர் கோனன்னநாட் காதியிட் டேற்றும் கழுத்திறம் பாடிக் களித்திடவே. | | 66 |
1246. குறிப்புரை: இப்பாட்டு, "கொங்குதேர் வாழ்க்கை" எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாட்டின் பொருளையே உடையது.1 அப்பாட்டின் கருத்தை நச்சினார்க்கினியர் பலவாகக் கூறுவார்.2 அண்ணல் - பெருமை. பெண்ணின் அமிர்த நல்லாள் - பெண்களுக்குள்ளே அமிர்தம் போல்வாளாய அழகு மிக்கவள். சுண்ணம், இங்கே, மகரந்தம். "பெடையொடு பூஞ் சுண்ணம் துதைந்த வண்டே" என்பதை முதலிற் கொள்க. தூங்கு ஒலி - தொடர்ச்சியாய் எழுகின்ற ஒலி. "நீர்" என்பது ஆகுபெயராய், அதனை யுடைய பொய்கையைக் குறித்தது. 'பொய்கையை யுடைய பொழில்' என்க. காசினி - பூமி. தாது - மகரந்தம், இதுவும் ஆகுபெயராய் அதனையுடை பூக்களைக் குறித்தது. இதன்பின் 'தாதுகளில்' என ஏழாவது விரித்து, 'வண்டே! காசினியில் பொழில்களில் பூத்த தாதுகளில் பெண்ணின் அமிர்தநல்லாள் குழல் நாற்றம் கண்டதுண்டுகொல்' என இயைத்து முடிக்க. 1247. குறிப்புரை: 'போதியிற் புத்தர்களே! நீவிர் எம் சந்நியாசியார் போலவே காவியுடுத்துச் சமணர்களைத் துன்புறுத்தும் வகையில் அவர்களது உறிகளைக் கைப்பற்றி வீணாக வம்பு செய்கின்றீர்கள்; (அவர்களை வாதத்தில் வென்றபாடில்லை. எம்முடன் சேர்ந்து) அவர்களை அன்று புகலியர் கோன் வாதில் வென்று கழுவேற்றிய திறத்தைப் பாடுதற்கு வாருங்கள்" என்பது இப்பாட்டின் பொருள். போதி - அரசமரம். இது புத்தர்கள் தெய்விகத் தன்மையுடையதாகக் கருதி வழிபட்டிருப்பர். "போதி" என்றது அதன் நிழலைக் குறித்தது. "போதியிற் புத்தர்கள்" என்பதை, 'பறம்பிற்பாரி' என்பது போலக் கொள்க. புத்தர்கள், அண்மை விளி. தாது கல் -
1. பாட்டு - 2. 2. தொல் - பொருள் - களவியல் - 10 - உரை.
|