| 1248. | களியுறு தேன்தார்க் கவுணியர் தீபன் கருதலர்போல் வெளியுறு ஞாலம் பகலிழந் தால்,விரை யார்கமலத்(து) அளியுறு மென்மலர்த் தாதளைந்(து) ஆழி யழைப்பவரும் துளியுறு வாடையி தாம்மட மானைத் துவள்விப்பதே. | | 67 |
காவிக் கல். 'சந்நியாசியார்' என்பது 'சந்நாசியார்' என மருவி வந்தது. அஃது ஆகுபெயராய் அவர் உடுக்கும் ஆடையைக் குறித்தது. சடலம் படுத்தல் - உடம்பிற் பொருந்த வைத்தல். தூதை - மட் பாண்டம். இதில் கஞ்சி ஊற்றி வைக்கப்படும். சிக்கம் - உறி. 'தூதையினை உடைய சிக்கம்' என்க. சமண முனிவர்கள் தாம் உண்ணும் கஞ்சியை இவ்வாறு உறியில் வைத்துக் கையிலே கொண்டிருப்பர். கீழே புறத்தே வைத்தால் ஈ, எறும்பு முதலிய சிற்றுயிர்கள் கஞ்சியில் வீழ்ந்து மாண்டு விடுமாம். 'சிக்கத்தில் கரம் சேர்த்து' என்க. கரம் - புத்தர்கள் கை. துலுக்குதல் - வம்பு பேசுதல். 'சும்மா தும்பு துலுக்குகிறான்' என்னும் வழக்கம் இப்பொழுதும் நாட்டில் உண்டு. காதுதல் - இங்கே, காய்தல் அது வாதில் வெல்லுதலைக் குறித்தது. சமணரும், புத்தரும் வேதத்தை இகழ்தலில் ஒன்று படினும் பிற வகையில் வேறுபட்டுத் தம்முட் கலாய்ப்பர். அது பற்றி, "ஞான சம்பந்தர் காலத்திற்றானே 'சமண சமயம் பொய்ச் சமயம்' என்பது நாடறிய மெய்ப்பிக்கப்பட்டு விட்டிருக்க, இன்று புத்தர்கள் ஏன் அந்தச் சமயத்தை 'பயனற்றது' எனக் காட்ட முயல வேண்டும் என்கின்ற முறையில் அமைந்தது இப்பாட்டு. துறவுக் கோலத்தால் புறத்தே சமணரைப் போல இல்லாமல் எம்மைப் போல உள்ள நீவிர், சமணரை வென்ற வெற்றியைப் பாடுவதிலும் எங்களோடு சேர்ந்து கொள்ள லாமே' என்பது தோன்ற, "நம் சந்நாசியார் சடலம் படுத்து" என்றார். பௌத்தத் துறவிகள் சிவந்த ஆடையை உடுத்துதல், பட்டைத் துவராடைப் படிமம் கொண்டாடும் முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே1 என அருளிச் செய்தமையாலும் அறியலாம். படிமம் - துறவுக் கோலம். நாம் உரை காணும் பாட்டில் "தாதுகல் தோய்த்த" என்பது நம் சந்நாசியார் ஆடையின் இயல்பு கூறியது. 'பௌத்தருடையது பட்டைத் துவராடையாயினும் நிறத்தால் ஒருபுடை ஒக்கின்றது' என்பது கருத்து. 1248. குறிப்புரை: இப்பாட்டு, பிரிவுணர்த்திய தலைவனுக்குத் தோழி தலைவி ஆற்றாளாவது கூறிச் செலவழுங்குவித்தது. கவுணியர் தீபன் கருதலர் (பகைவர்) ஞான ஒளியை இழப்பதுபோல ஞாலம் பகற் பொழுதை இழந்தால்' - என்க. களி
1. திருமுறை - 1 - 80.10.
|