பக்கம் எண் :

திருநகரப் படலம்103

 காத்திருந்தும் கடிமலர்கள் கமழ்நறுந்தேன்
           சோர்வுடைத் தாய்க் களிப்பு மாக்கும்
 ஏத்திருந்தும் வயவர்சிலை யெதிர்ந்தவர்தம்
           முயிர்வாங்கி யிசையு மீட்டும்
 பாத்திருந்தும் புலவர்குழா மொருகலைமான்
           றனைமணந்து பழியுந் தீரும்.

(இ - ள்.) நீர் நிறைந்த தடாகங்கள் பூ மலரப் பெற்றிருந்தும் (பூப்படைந்திருந்தும்) யாவரையுஞ் சேர்ந்து புகழாகிய பொருளையு முளவாக்கும். காக்களிலே திருந்தப்பெற்ற (காத்துக்கொண்டிருந்தும்) வாசனையுடைய பூக்கள் பரிமளிக்கின்ற நல்ல தேனைச் சொரிதலுடையனவாய் (களவு போதலை யுடைத்தாய்) களிப்பை யுளவாக்கும். அம் புகளாற் றிருத்தமடையும் வீரர்களுடைய விற்கள் எதிர்த்த பகைவர்களுடைய உயிரை வௌவி (துதித்தலமைந்திருந்தும்) புகழையு முண்டாக்கும். பாக்கள் திருந்தப் பெற்ற புலவர் கூட்டங்கள் (பகுப்புற்றிருந்தும்) கலைமானாகிய சரசுவதியை (ஆண்மானை)க் கூடிப் பழியும் நீங்கு மென்க.

பூத்திருந்தும் - மலர்ந்திருந்தும்; பூப்படைந்திருந்தும், யாவரையும் தோய்தல் - பெண்கள் யாவரையும் கூடல்; தடாகம் யாவரையும் பொருந்தல்; ஈண்டு மூழ்குதலாற் பொருந்துதலென்க. பூப்படைந்திருக்கும் காலத்துப் புணரின் பழிக்குள்ளாவரென்பது வழக்காறாகலின் ஈண்டுப் பூப்படைந்த தன்னைச் சேர்ந்தோரைத் தடாகஞ் சுத்தப்படுத்தலின், "புகழ்ப் பொருளுமாக்கும்" என்றார். காத்திருந்தும் - காக்களிற்றிருந்திய; காத்துக்கொண்டிருந்து. சோர்வு - ஈண்டுத் தேன் வழிதல்; சோர்வு காரணமாகக் களவு போதல். தன்னிடத்துள்ள தேன் முதலிய பொருணீங்கத் துக்க முளவாக அஃதின்றி யச்சோர்வு களிப்பைத் தருதலான் கமழ் நறுந்தேன் சேர்வுடைத்தாய்க் "களிப்புமாக்கும்" என்றார். உயிரைக் கோறலாற் பாவமும் பழியு முளவாதலின்றி யதற்கு மாறாக எதிர்ந்த வீரருயிரை வில்லானெய்து போக்கலின் வீரசுவர்க்க முதலியன கிடைத்தலின் "உயிர்வாங்கி யிசையுமீட்டும்" என்றார். ஒரு மாதினைப் பல்லோர் மணத்தல் உலகியலுக்கு மாறாகிய பழியாமாகலின் அதற்கு மாறாகப் புலவர் கூட்டங்கள் சரசுவதியாகிய பெண்ணைக் கூடிப் பழியினின்று நீங்கலின் "ஒரு கலைமான்றனை மணந்து பழியுந்தீரும்" என்றார்.

(வி - ம்.) ஏ - பாணம். பா - கவி. கலைமான் - சரசுவதி; ஆண் மான். மணந்து - கலந்து, புணர்ந்து.

(18)

வேறு

 ஆழ்ந்துகிடந் துங்கரப்ப தகழன் றேனை
           யறிஞரினி தமைத்தவருஞ் செய்யு டானுந்
 தாழ்ந்துகிடந் தும்புகழத் தக்க மைந்தர்
           தடங்கரமன் றவரறஞ்சா னெஞ்சந் தாமும்
 போழ்ந்துகிடந் தும்புனைவ வளையன் றேனைப்
           பொருகளிற்றுக் கோடுகளும் பொழிலி னுள்ளால்