பக்கம் எண் :

104தணிகைப் புராணம்

 வீழ்ந்துகிடந் தும்முயர்வ மலரன் றேனை
           வியனகருள் வெறுத்தபொருள் பலவு மன்றே.

(இ - ள்.) கீழுலகம் வரையி லாழமுற்றுக் கிடந்தும் (தன்னுட் கிடந்த பொருள்களை) மறைப்பது (அந்நகரைச் சூழ்ந்து கிடந்த) அகழி மட்டுமன்று. (மதிநுட்ப நூலோடுடைய) புலவர்கள் (சொன்னயம் பொருணயம்) இனிதமையச் செய்த (அருமையான செய்யுள்களும் (தன்னுட் கிடந்த பொருள்களை மறைப்பனவாகும்). (முழந்தாளளவும்) தாழ்வுற்றுக் கிடந்தும் புகழத்தக்கன (அந்நகரிலுள்ள) மைந்தர்கள் பெருமை பொருந்திய கைகள் மாத்திரமன்று; (அம் மைந்தர்கள்) பலவகை யறச் செயல்கள் நிறைந்த மனமும் (பலவகைப் பொருளும் தங்கிக் கிடந்து) யாவராலும் புகழத் தக்கனவாம். அறுபட்டுக் கிடந்தும் புனையப்படுவன (அந் நகர் மாதர்கள் கையிலணியும்) வளையல்கள் மாத்திரமன்று போர் செய்யும் யானைகளின் கொம்புகளும் (அறுக்கப்பட்டும்) கிம்புரி (தந்தப் பூண்) முதலியவற்றால் அணி செய்யப்படுவனவாம். சோலையினுள்ளிடத்தில் கீழே வீழ்ந்து கிடந்தும் உயர்வடைவன மலர்கள் மாத்திரமன்று. (அந் நகரிலுள்ள பெண்கள் நாயகரோடு கூடி) வெறுப் புற்று வீசியெறிந்த பொருள்கள் பலவும் உயர்வடைவனவாம்.

(வி - ம்.) போழ்தல் - அறுத்தல். வீழ்ந்து கிடந்தும் - கீழே வீழ்ந்து கிடந்தும். வெறுத்த - ஊடலால் வெறுத்து வீசிய.

(19)

வேறு

 நகர மூன்றினும் விராய்த்தொடை படுப்பன நாடித்
 தொகையி னாற்சில வுரைத்தன மினித்தொகு நகருள்
 வகையி னாற்சில வேறுவே றுரைப்பது மதித்துப்
 புகரி லாப்புடை நகர்வள முந்துறப் புகல்வாம்.

(இ - ள்.) அக நகர், இடை நகர், புடை நகராகய மூன்றினிடத்துங் கலந்து தொகுதியாகச் சேர்வனவற்றை ஆராய்ந்து கூட்ட வகையாற் சிலவற்றை யுரைத்தாம். இக் கூடிய நகர்களில் வகை முறையால் சிலவற்றை வேறுவேறாக உரைப்பதைக் கருதிப் புடைநகரின் வளத்தை முன்னர்ச்
சொல்வாம்.

(வி - ம்.) தொடை படுப்பன - தொகுதியாகச் சேர்வனவற்றை. மதித்து - கருதி.

(20)

புறநகர்

 கூவிரத்தடந் தேர்கடாய்க் குமரர்கள் பயிலும்
 தாவி லெல்லைய சக்கரங் குழித்தவா ரொழுங்கு
 மேவி யிந்நகர்க் குமரரை விண்டவர் நகரி
 ஏவ நன்றுழப் படுவதென் றியம்பலொத் துளவே.

(இ - ள்.) கொடிஞ்சியோடு கூடிய பெரிய தேரைச் செலுத்தி ஆடவர்கள் விளையாடுகின்ற கெடுதலில்லாத எல்லையின்கண் ணுள்ளவாகிய