பக்கம் எண் :

திருநகரப் படலம்105

சக்கரம் குழிக்கப்பெற்ற நீண்ட ஒழுங்கானது, பொருந்தி இந்நகரின்கணுள்ள குமரர்க்கு விரோதித்தவர் நகரமானது இவ்விதம் நன்றாக உழுதலைச் செய்யப் பெறுமென்று சொல்லுதலை யொத்துளது.

(வி - ம்.) எல்லையின்கண் ணுள்ளவாகிய ஒழுங்கென்க. வாரொழுங்கு - மீமிசைச் சொல். குமரர்க்கு - வேற்றுமை மயக்கம். விண்டவர் - பகைவர். நகரி - எழுவாய். ஏவம் - இவ்விதம். உழுதல் - கழுதை யேர் பூட்டி வரகும் கொள்ளும் வித்தல். "கடுந்தேர் குழித்த ஞெள்ளலாங்கண், வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப், பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்." என்னும் புறநானூற்றுச் செய்யுளானறிக. ஒழுங்குமேவி யியம்ப லொத்துள தென்க.

(21)

 பரும நின்றுகு மணிபரல் சொரிவதாப் பகட்டின்
 அருவி மும்மதம் விலாழிநீ ராவடி மிதித்தல்
 உருவ வன்மர மிடிப்பதா நிலம்வலி யுறுப்பார்
 விரவி நின்றவச் சூழலொத் துளசெண்டு வெளிகள்.

(இ - ள்.) குதிரைக் கல்லணையினின்றும் கொட்டுகின்ற இரத்தினங்கள் பருக்கைக் கற்களைச் சொரிவதாகவும், யானைகளினின்றும் அருவிபோ லொழுகுகின்ற மூன்று மதங்களும், குதிரையின் பல்லடி நுரையும் நீராக அவைகளை அடிகளான் மிதித்தல், பெரிய வடியோடு கூடிய மரத்தா லிடிப்பதாகவும், நிலத்தை (கல்லுமிட்டிகையும் நீரும் பெய்து) வலிமையுறக் குற்றுதல் செய்வோர் கலந்து நின்ற அவ்விடத்தை ஒத்துள்ளன குதிரை வையாளி செல்லும் வீதிகள்.

(வி - ம்.) பருமம் - குதிரைக்கல்லணை. பரல் - பருக்கைக் கல். விலாழி - குதிரைப் பல்லடி நுரை. செண்டு வெளி - குதிரை வையாளி செல்லும் வீதி. மூன்றிடத்தும் செயவெனெச்சத் தீறுதொக்கன. வலியுறுப்பர் - குற்றுதல் செய்வோர். "கல்லு மிட்டிகையும் பெய்து குற்றுச் செய்த நிலத்தை வன்னில" மென்று கூறும் வழக்கை தொல் - சொல். சேனா. 19 ஆம் சூத்திர வுரையா
னுணர்க.

(22)

 வற்க மிட்டவாம் பரிபயில் வன்னில மவற்றின்
 அற்கும் வன்குர மகழ்ந்தொளி ரரைமுழுச் சுவடு
 விற்க லைக்குழ மதிமுழு மதியென விளங்கப்
 பொற்க லைக்கடி தடங்குறி பொறித்தன போலும்.

(இ - ள்.) வாயின் வடிகயிற்றையிட்ட தாவிச் செல்கின்ற குதிரைகள் பயில்கின்ற (குற்றுச் செய்த) வலிய நிலத்தின்கண் அக்குதிரைகளின் (கீழே) தங்கப்பெற்ற வலிய குளம்புகளால் அகழப்பெற்று ஒளிர்கின்ற அரைச்சுவடும் முழுச்சுவடும், ஒளி பொருந்திய கலைகளோடு கூடிய இளமை பொருந்திய பிறை மதியும் நிறை மதியு மென்று சொல்லும்படி விளக்கமுறப் பொன்னாடையை யணிந்த நிதம்பத்தில் நகக்குறி பதித்தனவற்றை ஒக்கும்.

(வி - ம்.) வற்கம் - குதிரை வாயிலிடும் வடிகயிறு. "மறுவறு குதிரை வாயின் வடம் வடிகயிறு வற்கம்" என்னும் நிகண்டா னறிக. அற்கும் - தங்கும். "அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால், அற்குப