பக்கம் எண் :

திருநகரப் படலம்109

 கந்த ரம்வரு மசுவதி நாடவழ் முடிய
 மந்தி ரம்பல வகந்தழீஇ வான்றொடு மாடம்.

(இ - ள்.) பல குதிரைக் கூட்டங்களைத் தன்னகத்தே தழுவி ஆகாயத்தை யளாவிய மாடங்கள் அழகைத் தமக்குச் சேர்க்க குதிரைப் பிறவி (உலகத்திற்கு) வந்து தோன்றிய நக்கத்திர மிதுவாகுமென்று மகிழ்ச்சி யுற்று மேலாகத் தாங்கியது போல ஆகாயத்திற் சஞ்சரிக்கின்ற அசுவதி நக்கத்திரந் தங்குமுடியை யுடையன.

(வி - ம்.) சுந்தரம் - அழகு. ஈட்டிய - ஈட்ட. மந்திரம் பல - பல குதிரைக் கூட்டம். மாடம் அசுவதி நாள் தவழ்கின்ற முடியையுடையன எனக்
கூட்டுக.

(31)

 கடக முள்வயிற் காட்டிய கூடங்கண் மிசையும்
 கடகங் காட்டிய வென்பது கண்டகந் தழீஇய
 உடலும் வில்லின வும்பரும் வில்லின வென்ன
 அடலின் விண்ணிவந் தெழுந்தன வத்திர சாலை.

(இ - ள்.) அம்புகள் வைத்துள்ள இல்லங்கள் யானைக் கூட்டங்களைத் தம்முள்ளே காட்டியனவாகிய யானைக் கூடங்கள் தம்முடியின் மீதும் கடக விலங்கினத்தைக் காட்டியன என்பதனை நோக்கித் தம் முள்ளே தழுவியன, மாறுபடுதற் கேதுவான வில்லை யுடையன தங்கள் முடியின்மீது மூலநாளினை யுடையனவென்று சொல்லும் வண்ணம் வலியோடு ஆகாயத்தி லோங்கி யெழுந்தன.

கடகம் - யானைத்திரள். இதனைக் "கடகம் யானைத்திரட்பேர்" என்னும் நிகண்டா னறிக. கடகம் - கடக விராசி. உடலும் - மாறுபடுகின்ற. வில்லின - வில்லை யுடையன. மூல நாளினை யுடையன. இதனை "தேட்கடை குருகு கொக்குச் சிலையுட னன்றி லானி. ஈட்டிய அசுர நாளிவ் வேழ்பெயர் மூலமென்ப" என்னும் நிகண்டா னறிக.

(32)

 கிடுகு கூவிரங் கிம்புரி புரசைமத் திகைவார்
 வடுவில் கூர்ங்கணை வாள்சிலை யாதியா நான்கு
 படையி னார்ப்பன வுறுப்பெலாம் பண்பின ரியற்றல்
 அடைவின் முற்றிய சேரியு மனந்தமா லவணே.

(இ - ள்.) தேர்மரச் சுற்றும், தேர் மொட்டும், தந்தப் பூணும், யானைக் கழுத்திடு கயிறும், குதிரைச் சம்மட்டியும், நீண்ட குற்ற மில்லாத கூரிய கணைகளும், வாளும், வில்லும் ஆகிய கருவிகளையும், நால்வகைப் படையிற் கட்டப்படுவனவுமாகிய எல்லா அங்கங்களையும் தொழிற் பண்பினை நுனித்தறிந்த வினைஞர்கள் இயற்ற முறையாகச் சுற்றிய சேரிகள் அந்நகரத்துப் பலவுளவாம்.

(வி - ம்.) ஆதியாம் என்னும் பெயரெச்சம் உறுப்பென்னும் பெயரோடியையும், உறுப்பு - அவயவம் கருவி என இரு பொருள் கொள்க. அடைவு - முறை. முற்றிய - சுற்றிய. வார் - இடையிற் கட்டும் வாரெனினுமாம். பண்பினர் - ஈண்டுத் தொழிலியற்றுந் துறையிற் கைபோயவர். அனந்தம் + ஆல்; ஆல் : அசை. அவன் + ஏ ; ஏ : அசை.

(33)