| விஞ்சை வல்லவர் படையெலாம் விறந்துமே வாதார் | | நெஞ்சு துட்கெனும் புடைநகர் வளநிகழ்த் தினமேல் | | அஞ்சி லோதிய ராடவ ரொடுமத னமர்த்தல் | | எஞ்சு றாதபா சறையெனு மிடைநகர் மொழிவாம். |
(இ - ள்.) தத்தம் வித்தைகளிற் கைதேர்ந்த வல்லுநர்கள் (தங்கள் மதிநுட்பத்தா லியற்றிய) படைக்கலங்கள் யாவும் செறியப் பெற்று (மேற்சென்று முற்றுகையிட்ட) பகையரையர்களின் மனமானது துட்கென்னும் அச்சக் குறிப்பினை யடைதற் கேதுவாகிய புடைநகரின் வளத்தினை இதுகாறும் கூறினோம். இனி, அழகிய சிலவாகிய கூந்தலையுடைய மாதர்களோடும் ஆண்மக்களோடும் மன்மதனானவன் போர் செய்தல் எக்காலத்துங் குறையாத பாடி வீடென்று சொல்லுதற் கேதுவாகிய இடைநகர் வளத்தினைச் சொல்வாம். (வி - ம்.) விஞ்சை - வித்தை. விறந்து - செறிந்து. மேவாதார் - ஈண்டு முற்றிய பகைவர். துட்கெனும் - அச்சக்குறிப்பு. சில்லோதி - ஐம்பால்; வெளிப்படை. ஆடவரோடு மென்ற வும்மையை ஓதியரோடு மெனப் பிரித்துக் கூட்டுக. அமர்த்தல் - போர் செய்தல். பாசறை - பாடிவீடு. (34) இடைநகர் வேறு | புளினமுங் குயிற்றுபொற் குன்றும் பொய்கையும் | | அளிமல ரோடையு மலங்குய் யானமும் | | களிபெறு மாடமுங் கலந்த நீர்மையால் | | ஒளிவிசும் புலகினு மொண்மை மிக்கதே. |
(இ - ள்.) மணற் குன்றுகளும், செய் குன்றுகளும், மானிடராக்காத நீர்நிலையும் வண்டுகள் தங்கப்பெற்ற மலர்களோடு கூடிய நீர்நிலைகளும், விளங்குகின்ற இளமரக்காக்களும், களித்தலைப் பெறுதற் கிடமாகிய மாடங்களும் தம்முட் கலந்திருக்கப் பெற்ற தன்மையால் ஒளியோடுகூடிய தேவருலகத்தினைக் காட்டினு மழகுமிக்கதிவ் வகநகராம். (வி - ம்.) புளினம் - மணற்குன்று. பொய்கை - மானிடராக்காத நீர்நிலை. ஓடை - மானிடராக்கிய நீர்நிலை. உய்யானம் - இளமரக்கா; அரசர் விளையாடும் காவற் சோலையுமாகும் "உய்யானத்திடை யுயர்ந்தோர் செல்லார்" என்னும் மணிமேகலை யடியானும் குறிப்புரையானுமுணர்க. ஒண்மை - ஈண்டழகு. (35) | அவலெறி யுலக்கைபோ யதிரத் தாக்கலும் | | இவர்குலைத் தெங்கிள நீர்கள் சிந்துவ | | தவலருந் தாகநோய் தவிர வோச்சுவார்க் | | குவகையி னளித்திடு முதவி போன்றன. |
(இ - ள்.) அவலினை யிடிக்கின்ற உலக்கைகளானவை மேலே சென்று (முடி) அதிரும் வண்ணம் மோத எழுந்த கோட்புக்க தெங்கினங்கள் |