பக்கம் எண் :

திருநகரப் படலம்111

இளநீரைச் சிந்துவன. (அவ்வவலினை) இடிக்கின்றவர்க் குளவாகிய கெடுதலற்ற நீர் வேட்கையா லுளதாகிய நோயானது நீங்கும் வண்ணம் மகிழ்ச்சியோ டளிக்கின்ற உதவியை ஒத்தன.

(வி - ம்.) எறிதல் - இடித்தல். இவர் தெங்கெனக் கூட்டுக. இவர்தல் - எழுதல்.

(36)

 வன்மையி னிடித்திடும் வாசப் பொற்சுணம்
 வின்மலி நுண்டுக ளெழுந்து மேவலின்
 பன்மலர் பொற்கெனும் பரிசு தேன்விரைஇப்
 பொன்மலர் மணத்தொடும் பூத்த போன்றவே.

(இ - ள்.) (அந்நகரத்துள்ள நல்லார், தங்கள்) வலிமையா லிடிக்கப்பெற்ற வாசனையோடு கூடிய பொற் பொடியாகிய ஒளிமிகுந்த நுண்ணிய துகள்கள் மேலெழுந்து பொருந்துதலால் (காக்களிலுள்ள) பல மலர்களும் பொற்கென்னும் நிறத்தோடு தோன்றும் தன்மை தேனொடு கலந்து பொற்பூ மணத்தொடு மலர்ந்தனவற்றைப் போன்றன.

(வி - ம்.) வில் - ஒளி. பரிசு - தன்மை.

(37)

வேறு

 கந்து கம்புடைப் பார்முலை கச்சுக
 அந்தில் வீறுவ தம்மிணை யாகிய
 பந்தொ றுப்பன பார்ப்பவ வாய்வெளி
 வந்து தோற்றிய வண்ணநி கர்ப்பன.

(இ - ள்.) பந்தினை யடிக்கின்ற பெண்களின் முலைகள் மேலிறுகக் கட்டப்பட்டுள்ள கச்சினங்கள் கெடும்வண்ணம் (அதனைப் பிதிர்த்து மேற்செல்வன தமக்குவமையாகிய பந்தினை (அம்மாதரார்) தண்டஞ் செய்வனவற்றைப் பார்க்க ஆசை கொண்டு வெளிவந்து) தோன்றிய தன்மையை ஒக்கும்.

(வி - ம்.) கந்துகம் - பந்து. உக - கெட. அந்தில் - அசைநிலை. அவ்விடமெனவும் ஆம். வீறுவ - கச்சைப் பிதிர்த்து மேற் செல்வன. இணை - ஒப்பு. ஒறுத்தல் - தண்டித்தல். வண்ணம் - தன்மை. "வண்ண மேர் சந்தம் பண்பாம்" என்னும் நிகண்டா னறிக.

(38)

 வார்ந்த காதொடு மானுவ தென்றிழை
 யார்ந்து ளாரலைக் கப்படு மூசலிச்
 சார்ந்த மாதரைத் தாங்கிய நெஞ்சமும்
 ஊர்ந்த லைக்கப் படுமென்ப தொத்ததே.

(இ - ள்.) (தோளளவு) தாழ்ந்த காதோடுவமை யாவதென்று கருதி அணிகலன்க ளணிந்த பெண்களால் அசைக்கப்படு மூசலானது (இவ்வூசலிற்) றங்கிய மாதரிடத்துத் தங்கிய ஆடவர் மனமும் அப்பெண்களாற் செலுத்தப் பெற்று வருத்தப்படு மென்பதை யொத்துளது.