(வி - ம்.) இருப்பன - இருத்தலானவை. திரண்டன போன்றன - சேர்தலைப் போன்றன. அகரம் தொழிற் பன்மையான் வந்த தொழில் விகுதி. (42) | தொண்டை வாய்மணித் தூநகை மாதரார் | | வண்ட லாட்டயர் சூழல்கள் வந்தெதிர் | | கண்ட காளையர் கண்ணொடு முள்ளகம் | | விண்டி டாவகை மெய்ப்பய னல்குமே. |
(இ - ள்.) கொவ்வைக் கனிபோன்ற அதரத்தினையும் முத்துப் போன்ற தூய பற்களையுமுடைய பெண்கள் விளையாட்டைச் செய்கின்ற இடங்கள் தம்பால் மருவி நேரிற் கண்ட இளையவர் கண்களோடு மனமும் நீங்கா வண்ணம் காமவின்பத்தை நல்கும். (வி - ம்.) சூழல்கள் நல்குமென முடிவு செய்க. மெய்ப்பயன் - காம இன்பம். விண்டிடா வகை - நீங்கா வண்ணம். (43) | வடிவின் வென்றவ ளங்கொடி யீட்டமும் | | மிடறு வென்றவி ரிதலைப் பூகமும் | | மடந லார்திறை வாங்குவர் பாகடை | | தடவு மாடமி ருந்தவை தாழவே. |
(இ - ள்.) இளமை பொருந்திய அந் நகரத்து மாதரார் பெருமை பொருந்திய மேன் மாடங்களி லிருந்து வடிவினாலே (தாங்கள்) வெற்றி கொண்ட வளப்பம் பொருந்திய வெற்றிலைக் கொடிகளும் (தங்கள்) கண்டத்தால் வென்ற விரிந்த தலையினையுடைய கமுக மரங்களும் ஆகிய அவைகள் தாழும் வண்ணம் வெள்ளிலையும் பாக்குமாகிய திறையை வாங்குவார். (வி - ம்.) நல்லாரிருந்து கொடியும் கமுகுமாகிய அவைகள் தாழப் பாகடையாகிய திறையை வாங்குவாரென முடிவு செய்க. (44) | ஊடி முன்னுமின் னாருடை மேகலை | | வீட மைந்தர்கள் வெய்தென வீர்த்தலும் | | ஆட கப்பொடி யான்விளக் கட்டுந்தம் | | தோடு வில்லிடத் தூண்மறைந் துட்குவார். |
(இ - ள்.) (நாயகரோடு) சிறுலாஞ்செய்து (போதற்கு) முற்படுகின்ற மின்னை யொத்த அந்நகரத்து மாதராருடையும், மேகலையும் நீங்க ஆடவர்கள் விரைவாக ஈர்க்க அப் பெண்கள், பொற்பொடியான் விளக்கினை யணைத்துந் தாங்களணிந்திருந்த காதணிகள் ஒளியை யுண்டாக்க (நாணி)த் தூணின்கண்ணே மறைந்து வருந்துவார். (வி - ம்.) முன்னும் - முற்படும். உடைமேகலை - உம்மைத்தொகை. வீட - நீங்க. வெய்தென - விரைவாக, ஈர்த்தல் - இழுத்தல். (45) | வீசு சுண்ணமு மென்மலர்ச் சுண்ணமும் | | வாச மென்மலர் வார்மது வும்விரைஇத் |
|