| தேசு மிக்க திருநகர் கூட்டுமெய்ப் | | பூசி நின்றபொற் பிற்றெனத் தோன்றுமே. |
(இ - ள்.) அந்நகரத்து மாதரார் ஒருவர் மேலொருவர் வீசுகின்ற பொற் சுண்ணமும் மெல்லிய மலர்ப் பொடியும் மணத்தோடு கூடிய மலர்களினின்றும் ஒழுகுகின்ற தேனுங்கலந்து அழகினால் மிகுந்த அழகிய தணிகை நகரமானது கலவைச்சாந்தினை மெய்யின் கண்ணே அணிந்துநின்ற பொற்பினை யுடைத் தென்று சொல்லும் வண்ணம் தோன்றும். (வி - ம்.) விரவுதலாற் றேசுமிக்க நகரானது தோன்று மென்க. கூட்டு - கலவைச் சந்தனம். மெய்ப்பூசி - உடலிற்பூசி. (46) | சோலை வாயினுந் தோய்புனற் றேத்துமின் | | மாலை மார்பி்னர் மாட்டுநன் காட்டயர் | | வேலை மாதரின் வீழணி பம்புறல் | | கோல மாநகர் கொண்டது போன்றதே. |
(இ - ள்.) சோலையினிடத்தும், மூழ்குதற்குரிய புனலிடத்தும் ஒளியோடு கூடிய மாலையினையணிந்த மார்பினையுடைய ஆடவரிடத்தும், நன்றாக விளையாட்டைச் செய்கின்றகாலத்தில் பெண்கள்மாட் டிருந்து வீழ்கின்ற ஆபரணங்கள் நிறைதல் பெரிய நகரமானது அழகைக் கைக்கொண்டது போன்று தோன்றும். (வி - ம்.) தேத்து-இடம். ஆட்டயர்வேலை-விளையாடுகின்றகாலை. பம்புறல் - நிறைதல். கோலம் - அழகு. (47) | தோட்டுக் காதினர் சூழ்கலை யின்சுவை | | கேட்டுக் கற்றசு வாகதங் கேண்மையிற் | | கூட்டுக் கண்ணிருந் தோதக்கு றித்தவை | | கோட்டுக் கிள்ளைகள் கொண்டுந டாத்துமே. |
(இ - ள்.) குழையையணிந்த காதினொடு கூடிய (அந்நகரத்து) மாதரார் ஆராய்கின்ற நூல்களின் சொன்னயம் பொருணயங்களாகிய சுவையினை (அம்மாதரார் இடையறாது சொல்ல முறையாகக் கேட்டுப் பயின்ற கிளிகள் அச்சுவையினிடத்துத் தங்களுக்குளவாகிய நட்பினால் மாடங்களிற் கட்டிய கூட்டினிடத்திருந்து பலகாலும் சொல்லாநிற்க, அங்ஙனம் சொல்லா நிற்குஞ் சொற்களைக் கிளைகளில் வாழுங் கிளிகள் பலவிடங்களினும் கொண்டுசென்று பயிலும். (வி - ம்.) சூழ - ஆராய்கின்ற. சுவாகதம் - கிளி. கூடு - மாடங்களிற் கட்டிய கூடு. குறித்து - கருதி. கொண்டுநடாத்தும் - பல விடங்களிலும் கொண்டு சென்று பயிலும். (48) | பூவை பைங்கிளி பூங்குயில் வண்டினம் | | தாவு மந்தியும் யூகமுந் தத்தம |
|