| தாவி யந்துணை யோடும ளவளாய | | மேவி யும்பர்க்கும் வேட்கைபெருக்குமே. |
(இ - ள்.) நாகணவாய்ப்புள்ளும், பசிய கிளிகளும், பொலிவு பெற்றகுயிலும், வண்டின் கூட்டங்களும், தாவுகின்ற செங்குரங்குகளும். கருங்குரங்குகளும் தத்தம் உயிரை யொத்த பெட்டைகளோடும் கலந்து பொருந்தித் தேவர்களுக்கும் மெய்யுறு புணர்ச்சிக்கண் விருப்பத்தினை மிகச்செய்யும். (வி - ம்.) ஊகம் - கருங்குரங்கு. அளவளாய் - கலந்து. தேவருல கத்து நோக்காற் புணர்தலின்றி இவ்வாறு மெய்யுறு புணர்ச்சியின்மையான், "தேவர்க்கும் வேட்கை பெருக்கும்" என்றார். (49) | ஏர்மி குத்தவி டைநக ரீதினி | | நீர்மி குத்தநி ழற்கிடங் கும்பொறிப் | | போர்மி குத்தபொன் னிஞ்சியுஞ் சூழ்ந்துநற் | | சீர்மி குத்தவ கநகர் செப்புவாம். |
(இ - ள்.) அழகு மிகுந்த இடை நகரத்தின் நிலைமை யீதாகும் இனி நீர் நிறைந்த குளிர்ச்சியோடு கூடிய அகழும், இயந்திரங்களின் போர்த் தொழின் மிகுந்த அழகிய மதிலும் சூழ்ந்த நல்ல சிறப்பு மிகுந்த அக நகரின் நிலைமையைச் சொல்வாம். (வி - ம்.) நிழல் - குளிர்ச்சி. பொறிப் போர் - பொறிகள் செய்யும் போர். (50) அகநகர் வேறு | வேலவன்முன் விழுங்குகெனப் பணித்திடலும் | | வீரமகேந் திரத்தை யுண்டு | | சாலவத னிடத்தமர்ந்த தகுவர்குல | | மேயழித்துத் தந்திட் டீங்கு | | நீலநெடுங் கடறனது நவையுமவ | | னருட்டிறத்தா னீங்கிப் பண்டு | | போலதனைச் சூழ்கிடந்தாற் போன்றதுபொன் | | மதிலுடுத்த கிடங்கு மாதோ. |
(இ - ள்.) அழகிய மதிலாற் சூழப்பட்ட அகழியானது முருகப்பெருமான் (கடலை நோக்கி) முற்காலத்து வீரமகேந்திர மென்னும் பட்டினத்தை விழுங்குவாயாக வென்று கட்டளையிடக் கரிய கடலானது அந் நகரத்தினை யுட்கொண்டு மிகுதியாக அந் நகரத்தின்கட் டங்கும் அசுரர் குலத்தை மாத்திரம் அழித்து இத்தணிகைக்கண் அந் நகரத்தைக் கொணர்ந்து நிறுவி (ஆணை கடத்தலாகிய) குற்றத்தையும் அம் முருகப் |