(இ - ள்.) சிகரங்கள் (கரைகள்) பொருந்திய (மலையும் கடலுமாகிய) தங்கள் குலத்தினை யடக்கல் (குமரக் கடவுளாகிய) தனக்கே யல்லாமல் குறுமுனிவன் ஆகிய அடியான் மாட்டும் அத்தொழிலை வைத்த இறைவனாகிய முருகப் பெருமானை வணங்கி வேண்டும் வரங்களைப் பெறச் சக்கரவாளகிரியும், அதன் பக்கலிற் பெருமையோடு விளங்கிய பெரும்புறக் கடலும் மதிலென்னும் பெயரையும், அகழியென்னும் பெயரையும் பூண்டு (இத்தணிகை வரையை) அடைந்தனவோ என்று யாவரும் கூறும் வண்ணம் அசைகின்ற கொடிகள் கட்டப் பெற்ற மதிலினுயர்ச்சியும் அகழியின் விரிவும் (கண்டோர் யாவரும்) ஐயங்கொள்ளும் வண்ணம் பொருந்தும். (வி - ம்.) கோடு நெருங்கிய - மலையைக் குறிக்கும் பொழுது சிகரங்கள் நெருங்கிய எனவும், கடலைக் குறிக்கும் பொழுது கரைகள் நெருங்கிய எனவும் பொருள் கொள்க. குலம் என்றது கடலினத்தையும் மலையினத்தையு மென்க. குறிய தொண்டன் ஈண்டகத்தியன். மதிலகழிப் பெயர் - மதிலென்கிற பெயரும் அகழி என்கின்ற பெயரும். உகப்பு - உயர்ச்சி. "உகப்பே யுயர்வு" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தா னுணர்க. (53) | பாதலமுன் னுலகமெலாம் படிந்தாடிப் | | பருகியுளப் பரிவு தீர | | ஆதிகம டந்துளைந்து களிதூங்க | | வழற்கால வரனார் தங்கும் | | சோதியழ றழலாமை யப்புவனத் | | தினிதமர்வோர் தோய்ந்து மெய்யிற் | | சீதமுற வவ்வளவுஞ் சென்றாழ்ந்து | | கிடந்ததிந்தத் தெளிநீர்ச் சூழல். |
(இ - ள்.) கீழுலகினை முதலாக வுடைய ஏழுலகங்களி லுள்ளாரும் மூழ்கி விளையாடி யுண்டுள்ளத்தின்கண்ணுள்ள துன்பம் நீங்கவும், விண்டுவாகிய முதலாமை துளைந்து விளையாடி இன்பத்திலே தங்கவும், காலாக்கினி யுருத்திரனார் வாசம் பண்ணுகின்ற ஒளியோடு கூடிய அக்கினியானது வெதுப்பாமல் அக்காலாக்கினி யுருத்திர புவனத்தின்கண் ணினிதாகத் தங்குபவர்கள் மூழ்கித் தங்கள் மெய்யின்கட் குளிர்ச்சியுறும்படி அக்காலாக்கினி புவனம் வரையும் சென்றாழமுற்றுக் கிடந்தது இவ்வகழியாகிய தெளிந்த நீரையுடைய இடம். (வி - ம்.) பாதல முன்னுலகம் - கீழுலக முதலாகிய ஏழுலகம். உம்மைகள் எண்ணின்கண் வந்து தொக்கு நின்றன, தழலாமை - வெதுப்பாமல்; நீர்ச்சுழல் ஈண்டுக் கிடக்கும் என்க. (54) | அந்தரத்தில் விண்ணவர்கட் கணிநகரம் | | பற்பலவு மமைத்த வேதன் | | இந்தநக ரனைத்துமொரு மதலையின்றே | | லற்காவென் றெண்ணி வல்லே |
|