| மைந்துபெறு மொருமலையந் நகரனைத்துஞ் | | செறிந்தோங்க வகுத்தல் போலும் | | கொந்தொளிவிட் டெறிக்குமணி குயின்றுவெளி | | யடைத்துகந்த கோணை நொச்சி. |
(இ - ள்.) ஆகாயத்தின்கண்ணே தேவர்களுக் கழகிய நகரங்கள் பற்பலவற்றையும் செய்த பிரமன் (யானுளவாக்கிய) இந் நகரங்களெல்லாம் (தம்மைத் தாங்குவதொரு) தூணொன்றின்றாயின் ஆகாயத்தின்கட் டங்கமாட்டாவென்று கருதி வலிமையைப் பெறுகின்ற ஒருமலையை அந்நகரங்க ளெல்லாஞ் செறிந்து உயர்ச்சியை யடையச் செய்ததுபோலாகும். கூட்டமாகிய ஒளியினை வீசி விளங்குகின்ற மணிகளழுத்திய ஆகாயத்தை மறைத்துயர்ந்த அழியாத மதில். (வி - ம்.) இந்த நகரம் - அந்தர நகரம். மதலை - தூண். "மதலையே கொன்றை பிள்ளை மரக்கலம் கொடுங்கை தூணாம்" என்னும் நிகண்டா னறிக. அற்கா - தங்கா. கொந்து - கொத்து. வெளி - ஆகாயம். உகந்த - உயர்ந்த. கோணை - அழியாத. (55) | கிழக்கமர்ந்த வேழுலகுந் தமக்குமக | | ழெனவுடுத்த கிடங்கும் விண்ணோர் | | வழக்கமர்ந்த வேழுலகுந் தமக்குமதி | | லெனவளைத்த மதிலும் வேத | | முழக்கமர்ந்த தணிகைவரை முருகனிடர் | | துமித்ததுமேன் மொய்யா தோம்ப | | வழக்கமர்ந்த தனதருளை விடுப்பவது | | போய்வளைந்த வுருவம் போலும். |
(இ - ள்.) கீழே தங்கிய ஏழுலகங்களும் தங்களுக்கும் அகழியாகப் பொருந்திய அகழியும், தேவர் வழங்குதல் பொருந்திய (ஆகாயத்தின் கட் டங்கிய) ஏழுலகங்களும் தங்களுக்கும் மதிலாகக் கொண்ட மதிலுமாகிய இவை யிரண்டும் வேத வொலி பொருந்திய தணிகை மலையின்க ணெழுந்தருளிய முருகப் பெருமான் இப் பதினான்குலகின்கணுள்ள (மூவகையான மக்களுக்குளவாகிய) பிறப் பிறப்பாகிய துன்பங்களைக் கெடுத்து அத்துன்பமானது மேலும் பொருந்தாது பாதுகாப்பதற்கு (தம்மை வழிபடும் அடியார்களுக்கு) வழங்குதல் பொருந்திய தனது (கைம்மாறில்லாத) நல்ல அருளினை (க் காக்கும் வண்ணம்) செலுத்த அவ்வருளானது சென்று விளைந்த வடிவத்தை யொக்கும். (வி - ம்.) முருகப் பெருமான் மேல் கீழுலகி னுள்ளாருடைய இடரைத் துமித்து அவ்விடரானது மீண்டும் அவர்களைப் பற்றாவண்ணம் ஓம்பும் பொருட்டு விடுத்த அருளென்க. கிழக்கு - கீழ். "காணிற் கிழக் காந்தலை" எனும் பொய்யா மொழியா னுணர்க. வழக்கமர்ந்த - வழங்குதல் பொருந்திய. அடியார்கட்கு வழங்குதல் பொருந்திய எனக்கூட்டுக. அது - அவ்வருள். (56) |