| களவொழுக்கி னைந்திணையு நானிலமு | | மொருங்கடுத்த கலப்பி னாற்ற | | உளமதித்த வேற்கடவு ளோங்கல்புற | | வம்பணையீண் டுறுத னோக்கி | | அளவையிடற் கரிதாக வேறமைத்த | | கடல்போலு மகழி வேனில் | | தளர்வகல வாட்டயர்வார் சமைத்துறுத்த | | பலமதலை தாங்கு மன்றே. |
(இ - ள்.) கள வொழுக்கத்தின்கண் நிகழு மைந்திணைப் புணர்ச்சியையும் நால்வகை நிலமும் பொருந்திய கலப்பினிடத்துச் செய்யத் திருவுளத்திற் கொண்ட வேற்படையை யுடைய முருகக் கடவுள், குறிஞ்சியும், முல்லையும், மருதமுமாகிய மூவகை நிலங்களு மிவ்விடத்தே பொருந்தி யிருத்தலைக் கருதி (யாவராலும்) அளவிடற் கருமையாக வேறு செய்த கடலினை யொக்கும் அகழி. (வி - ம்.) அவ்வகழி வேனிலா னுளவாகிய தளர்ச்சி நீங்கும் வண்ணம் (புனலாட்டைச் செய்யும் தலைவர்கள்) கரிமுக வடிவாகவும் பரிமுக வடிவாகவும் செய்த பல மரக்கலங்களைத் தாங்கு மென்க. களவொழுக்கி னைந்திணை - களவொழுக்கினா லுளவாகிய ஐந்திணைப் புணர்ச்சி; ஐந்திணை புணர்ச்சிக்கானமையின் ஆகுபெயர். ஒருங்கடுத்த கலப்பினாற்ற - ஒருங்கு சேர்ந்த கலப்பினிடத்துச் செய்ய. இன் ஏழாவத னுருபு. வேனிற்றளர்வு - வேனிலா னுளவாகிய சோர்வு. ஆட்டயர்வார் - (இருகாமத்திணை ஏரி முதலியவற்றி லாடுவார் போல) புனலில் விளையாட்டுச் செய்பவர். உறுத்த - சேர்ந்த. மதலை - மரக்கலம். "மதலையே கொன்றை பிள்ளை மரக்கலம் கொடுங்கை தூணாம்" என்னும் நிகண்டா னறிக. (57) | முத்தனைய நகைமடவார் வீசியசுண் | | ணமுமுலையிற் கழிந்த சாந்தும் | | மைத்தகுழன் மலர்த்தாது மஞ்சளுமாட் | | டயர்காலை மலிந்த யாவும் | | தத்துதிரைப் பேரகழி யெறிந்தொதுக்கும் | | வண்டலொளி தழைக்கு மாற்றாற் | | சுத்தநறுங் கடல்சூழ்ந்த தமனியப்பார் | | பொருமடுத்த சூழ லெல்லாம். |
(இ - ள்.) முத்தினை யொத்த பல் வரிசையை யுடைய அந் நகரத்திளம் பெண்கள் (ஒருவர்மே லொருவர்) வீசியெறிந்த பொற்பொடியும், தங்கள் தனங்களினின்றும் கழித்த கலவைச் சந்தனமும், கரிய கூந்தலின் கண்ணுள்ள மலர்ப் பொடியும் மஞ்சளும், புனலாடுகின்ற காலத்து வீழ்ந்து மலிந்தனவாகிய எல்லாப் பொருள்களும், தாவுகின்ற அலைகளையுடைய பெரிய அகழி (அலையாகிய கையால்) எறிந்தொதுக்குகின்றவண்டலாகும். |