அவ்வண்டல் (பொன்போல்) ஒளியை வீசும் தன்மையால் (அவ்வகழியை) அடுத்துள்ள இடங்களெல்லாம் நறிய நன்னீரையுடைய பெரும்புறக் கடலைச் சூழ்ந்த பொன்னிறத்தை யுடைய பூமியினை யொக்கும். (வி - ம்.) மைத்த-கரிய. சுண்ணமும், சாந்தும், மஞ்சளும், மலிந்த யாவும் வண்டலென முடிக்க. அவ்வண்ட லொளிவிடுதலால் அகழியைச் சுற்றிய இடமெல்லாம் புறவாழியை யடுத்த பொன்னிறப் பூமியினை யொக்குமெனக் கூட்டுக. (58) | வீங்குபுனற் சரவணத்து வேற்கடவு | | டனைவிரிபொற் றவிச தாகத் | | தாங்குமல ரினமென்று தாமரையும் | | வரைகிழித்த தடந்தோண் மாலைப் | | பூங்குவளை மலரினமென் றிருகுவளைப் | | பலமலரும் பூத்த தென்ப | | ஓங்குமவ னருட்குரியார் தமக்கடுத்தா | | ரையும்போற்று முறுவர் மான. |
(இ - ள்.) உயர்ந்த முருகப் பெருமா னடியார்க் கடியாரையும் போற்று முனிவரை யொப்ப மிக்க நீரையுடைய சரவணப் பொய்கையில் வேற்படையை யுடைய முருகக் கடவுளை விரிந்த அழகிய ஆசனமாகத் தாங்கிய தாமரை மலருக்கினமாகு மென்று தாமரை மலரும், கிரவுஞ்ச மலையைப் பிளந்த பெருமை பொருந்திய தோளினிடத் துளவாகிய மாலையிற் பொருந்திய பொலிவு பெற்ற குவளைமலருக் கினமாகுமென்று கருங்குவளையுஞ் செங்குவளையுமாகிய இருவகை மலர்களும் மலர்ந்தன வென்று சொல்வார்கள். (வி - ம்.) இரு குவளை - கருங்குவளை, செங்குவளை, அருட்குரியார் தமக்கடுத்தார் - அடியார்க்கடியார். உறுவர் - முனிவர். இதனை "உறற்பால நீக்க லுறுவர்க்கு மாகா" என்ற நாலடிச் செய்யுளா னுணர்க. (59) | இன்னுமறை பலகாலிங் கிகப்புறினுங் | | கடலமுத மெடுக்க வேண்டி | | மன்னமரர் துயவுறினு மிடர்நமக்கெய் | | தாவெனமான் மகிழ்ச்சி கூரத் | | துன்னுமக ரங்களுமோட் டாமையுமன் | | னவன்கரத்துத் தூய வாழி | | மின்னகுகூ ரிழந்தேனென் றல்லாக்கு | | மிடங்கர்களும் விறக்கு மன்னோ. |
(இ - ள்.) (முன்னர் மறைகளைச் சேரமகாசுரன் கொண்டு கடலிலொளித்தது போல) இனியும் வேதங்களானவை பன்முறை யிவ்வுலகை விட்டு நீங்கினாலும் பாற்கடலின்கண் ணமுதமெடுக்க விரும்பித் தேவர்கள் |