வருந்தினும் (கொணர்தலும் தாங்கலுமாகிய) துன்பங்கள் நமக்குப் பொருந்தா வென்று விண்டு மகிழ்ச்சி மிக (அவ்வகழியின்கண்) பொருந்துகின்ற சுறா மீன்களும் பெரிய ஆமைகளும் அவ்விண்டுவின் கரத்தில் (ஆதிமூலமே யென்ன யானையைப் பிடித்த முதலைமே லேவப் பட்டு வெற்றி பெற்றுத்) தங்கிய பரிசுத்தமான சக்கரப் படையானது ஒளியோடு விளங்குகின்ற கூரினையிழந்தோ மென்று மயங்குதற் கேதுவாகிய முதலைகளும் செறிந்து வதியும். (வி - ம்.) இகப்புறினும் - நீங்கினும். துயவு - வருத்தம். அல்லாக்கும் - மயங்கும். விறக்கும் - செறியும். (60) | நெடுங்கைவழிப் புழையகத்து நிறைகடலோ | | டெமைமடுத்து நிலத்து மீளக் | | கடுங்கொலைய களிற்றுமுகக் கடவுள்பல்கால் | | விடுத்தெமது கரஞ்சேர் சங்கம் | | அடுங்கணங்கொண் டகன்றிடினுங் கவலையிலே | | மெனத்திருமா லயர்வு நீங்கப் | | படுங்கதிர்வெண் மணிகொழிக்கும் பலவளைசூழ் | | தலைப்பணிலம் பல்ல சூழும். |
(இ - ள்.) கடிய கொலைத் தொழிலையுடைய யானை முகத்தையுடைய மூத்த பிள்ளையார் நீண்ட துதிக்கையின்கண் ணுள்ள துளையினிடத்து நிறைந்த பாற்கடலோ டெம்மையு முட்கொண்டு இப் பூமியின்கண் (திருவிளையாடலாக) இன்னும் பலதரம் மீள விடுதலைச் செய்து எமது கரத்திலுள்ள சங்கத்தை (இவ்வுலகத்தை யெல்லாம்) கொல்ல வல்ல (அப்பெருமான் பரிவாரமாகிய) பூத கணங்க்ள் கொண்டு செல்லினும் யாம் கவலையடையே மெனத் திருமால் வருத்தம் நீங்கும் வண்ணம் ஒளி பொருந்திய முத்துக்களைச் சொரியும் வலம்புரிச் சங்கம் ஆயிரம் சூழப்பெற்ற பாஞ்சசந்ய மென்னும் சங்கங்கள் பல மொய்க்கப்பெறும். (வி - ம்.) தலைப்பணிலம் - பாஞ்சசந்யம். பாஞ்சசந்ய மென்னும் சங்கினை ஆயிரம் வலம்புரிச் சங்கங்கள் சூழல் முறையாகலின் "மணிகொழிக்கும் பல்வளைசூழ் தலைப்பணில" மென்றார். இதனை ".இப்பியாயிரமே சூழ்ந்த" என்னும் நிகண்டா னறிக. (61) | மந்தரநட் டரவநெடுங் கயிறியைத்துக் | | கடைந்துலவா மருந்து காண | | அந்தரரு மினிவருவர் பேரலுமென | | முகிலினங்க ளாழி நோக்கா | | திந்தமணி நெடுங்கிடங்கி னறும்புனல்வாய் | | மடுத்தெழுந்தவ் விளைப்பு நீங்கச் | | சந்தமணி மதிற்றலையிற் கிடந்துவெளி | | பரந்தெங்குந் தளிக்கு மன்றே. |
|