(இ - ள்.) மந்தர மென்னும் மலையை மத்தாக நட்டுப் பாம்பாகிய நீண்ட கயிற்றை யாத்துக் கடைதலைச் செய்து சாவா மருந்தாகிய அமிர் தத்தை யுளவாக்க வந்தவராகிய தேவரும் இன்னும் வருவார்களென்று மேகக் கூட்டங்கள் (நீரை யுட்கொள்ளக்) கடலினை நோக்கிச் செல்லாது இத் தணிகையின்கண் ணுள்ள அழகிய நீண்ட அகழியின்கண் ணுள்ள நல்ல நீரை யுட்கொண்டெழுந்து (அங்ஙன முண்ட அயர்வு நீங்க) அழகினை புடைத்தாகிய அந்நகர் மதிலிடத்துத் தங்கி ஆகாயத்தின்கட் பரவி எங்கும் மழையைத் துளிக்கும். (வி - ம்.) உலவா மருந்து - ஈண்டுச் சாவா மருந்தாகிய அமிர்தம். சந்தம் - அழகு. வெளி - ஆகாயம். தளிக்கும் - துளிக்கும்; "தளி யென்பதுளியே கோவில்" என்னும் நிகண்டா னறிக. (62) | ஒழுகுதிரைக் கிடங்கிடைநீண் மதில்கடல்க | | ளொருங்குவிரா யுறுநீர் நாப்பண் | | விழுதுநிகர் சடைப்பெருமான் றழற்பிழம்பா | | யெழுந்தவுரு விழையக் கங்கை | | பழுதறுமால் பதந்துருவிப் புனல்கரப்பப் | | பங்கயத்தோன் பறவை யாகி | | எழுமளவி லோசனிக்கு முறைகாட்டி | | யிடைமதிற்கட் டுளும்பு மன்றே. |
(இ - ள்.) நீண்ட வலைகளோடு கூடிய அகழியினிடத்து நீண்ட மதிலானது எழுவகைக் கடலும் பெருகியொருசேர விரவிக்கலந்த மிக்க பிரளய வெள்ளத்தி னடுவில் விழுதினையொத்து நீண்ட சடையினை யுடைய சிவபெருமான் தீப்பிழம்பாக எழுந்தருளிய வடிவினை யொப்ப (பிரமனைப்போல் முடிகண்டாமெனக்) குற்றம்படுதலிலவாகிய விண்டு, அடியினைத் தேடி(ப் பன்றி வடிவாக) நீரின்கண் மறையத் தாமரை மலரின்கண் வதியும் பிரமன் அன்னப் பறவையாகி யெழுங் காலத்திற் சிறையடிக் கொள்ளும் முறைமையினைக் காணச்செய்து (ஆகாய) கங்கையானது மதிலிடையிலே துளிக்கும். (வி - ம்.) ஒழுகுதல்-நீளல்; `வார்தல் போதலொழுகல் மூன்றும், நேர்பும் நெடுமையுஞ் செய்யும் பொருள' என்பதனா னறிக. மதில் எழுவாய். கடல்க ளொருங்குவிரா யுறுநீர் - பிரளய வெள்ளம். நாப்பண் - நடுவிடம். விழுது - ஆல்முதலியவற்றினின்று மிரங்கும் ஒரு வகைக் கொடி. கங்கை துளும்புமெனக் கூட்டுக. ஓசனித்தல் - சிறையடிக் கோடல். இதனை "உடைதிரை முத்தஞ் சிந்த ஓசனிக்கின்ற வண்ணம்" என்னும் சிந்தாமணி (2652)ச் செய்யுளி னுரையா னுணர்க. (63) | கோளுறுவிண் ணரவமணி கொழிக்கு மகன் | | கிடங்குடுத்துக் குரூஉக்கல் வேய்ந்து | | வாளுறுதிண் மதிலிடைத்த னுடலுரிஞத் | | தவழ்ந்தேகும் வனப்பு முந்நீர்த் |
|